நூல் வெளியீட்டு விழா
16 Mar 2026, 4:46 pm
<p><strong>நூல் வெளியீட்டு விழா</strong></p>
<p>கோவை, மார்ச் 16- எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய ”நான் பிழை” எனும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. எழுத்தாளர் ரவிச்சந்திரன் அரவிந்தன் எழுதிய ”நான் பிழை” எனும் சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழா விற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்டச் செயலாளர் அ. கரீம் தலைமை வகித்தார். தங்க முருகேசன் வரவேற்றார். எழுத்தாளர் இரா.முருகவேள் நூலினை வெளியிட, அதன் முதல் பிரதியினை பூ.சா.கோ.கலை அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் ராம்ராஜ் பெற்றுக்கொண்டார். எழுத்தாளரும் பேராசிரியருமான ஈரோடு ஷர்மிளா வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து, சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மற்றும் பிரபல எழுத்தாளர், கதைசொல்லி பவா. செல்லதுரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். நூலாசிரியர் ரவிச்சந்திரன் அரவிந்தன் ஏற்புரையாற்றி னார். முடிவில், ஜின் நன்றி கூறினார். இதில், தமுஎகச மாவட்டச் தலைவர் மு.காளிநாதன், நிர்வாகிகள் தி.மணி, மு.ஆனந் தன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
