தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பட்டுக்கோட்டை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்க்க வைக்கப்பட்டவர் மீட்பு இருவர் மீது நடவடிக்கை

3 Jul 2026, 9:32 pm
பட்டுக்கோட்டை அருகே கொத்தடிமையாக  ஆடு மேய்க்க வைக்கப்பட்டவர் மீட்பு இருவர் மீது நடவடிக்கை
<p><strong>பட்டுக்கோட்டை அருகே கொத்தடிமையாக ஆடு மேய்க்க வைக்கப்பட்டவர் மீட்பு இருவர் மீது நடவடிக்கை</strong></p><p>​தஞ்சாவூர், ஜூலை 3 - தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம் பெரியக்கோட்டை அருகே உள்ள காடந்தங்குடி கோட்டகம் பகுதியில், கொத்த டிமையாக ஆடு மேய்க்க வைக்கப்பட்டிருந்த நபரை வருவாய்த் துறை மற்றும் கொத்த டிமை ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் அதிரடி யாக மீட்டனர். இது தொடர்பாக இருவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா, மலையூர் கிராமத்தைச் சேர்ந்த ரவிச் சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரும், செம்மறி ஆடு வளர்ப்புத் தொழி லில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பேரா வூரணியைச் சேர்ந்த அய்யாசாமி என்பவரை ஆடு மேய்க்கும் வேலைக்காக, பிரேமா என்ற இடைத்தரகர் மூலம் பணியமர்த்தியுள்ளனர். ​கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி முதல், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு மேய்க்கும் பணியில் அய்யாசாமி ஈடுபடுத்தப்பட்டுள்ளார். தற்போது, பட்டுக்கோட்டை வட்டம், காடந்தங்குடி கோட்டகம் பகுதியில் வைத்து, அவர் கொத்த டிமையாகக் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப் படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத் தது. ​இதனைத் தொடர்ந்து, பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் சங்கர் தலைமை யில், வட்டாட்சியர் அகத்தியன், கொத்தடிமை ஒழிப்பு முறை தொழிலாளர் உதவி ஆய்வா ளர்கள் பாலச்சந்தர், மீனாள், கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் புனல் ரவி, இளந்தென் றல் மற்றும் செட் இந்தியா (SET India) தன்னார் வத் தொண்டு நிறுவன அலுவலர் அருண், வரு வாய் ஆய்வாளர் இளவரசன், கிராம நிர்வாக அலுவலர் மாரியம்மாள், அலுவலர்கள் மணி கண்டன், மணிவேல் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, அய்யாசாமி காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரமும் ரவிச்சந்திரன் மற்றும் மணி கண்டனின் கண்காணிப்பிலேயே சுதந்திர மற்ற நிலையில் வேலை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மதுக்கூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. காவல்துறையினரின் உதவியுடன் அய்யா சாமியை மீட்ட அதிகாரிகள், அவரைத் துன்பு றுத்தி கொத்தடிமையாக வைத்திருந்த ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் விசாரணைக்காக மதுக்கூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட அய்யாசாமிக்கு, வருவாய் கோட்டாட்சியர் சங்கர் உரிய விடுவிப்புச் சான்றிதழை வழங்கினார். பின்னர், அவர் பேராவூரணி வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப் பட்டு, அங்கிருந்து அவரது உறவினர்களிடம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.