டெல்டா மாவட்டங்களில் கொத்தடிமை சிறுவர்கள், குடும்பத்தினர் அதிகம்! கொத்தடிமை மீட்பாளர்கள் ஆய்வில் தகவல்
4 Jul 2026, 8:45 pm

டெல்டா மாவட்டங்களில் கொத்தடிமை சிறுவர்கள், குடும்பத்தினர் அதிகம்! கொத்தடிமை மீட்பாளர்கள் ஆய்வில் தகவல்

தஞ்சாவூர், ஜூலை 4 - டெல்டா மாவட்டங்களில் வாத்து மேய்க்க கொத்தடிமைகளாக, ஆந்திர மாநிலத்திலிருந்து அதிகளவில் சிறுவர்கள் வரப்படுகிறார்கள் என, கொத்தடிமை மீட்பாளர்கள் தன்னார்வ அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசு 2030-க்குள் கொத்தடி மைத் தொழிலாளர்கள் இல்லாத மாநில மாக தமிழ்நாட்டை உருவாக்கும் இலக்கை அறிவித்து, தொழிலாளர்களை அடை யாளம் காணுதல், மீட்பு, மறுவாழ்வு, கணக்கெடுப்புகள், அதிகாரிகளுக்கான பயிற்சிகள் மற்றும் பல்துறை ஒருங்கி ணைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதில், பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து செயல்படுகிறது.

இது தொடர்பாக தஞ்சாவூரில் செவ்வாய்க் கிழமை ஷெட் இந்தியா அமைப்பின் சார்பில், கொத்தடிமைத் தொழிலாளர்கள் முறை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்வுக்கு ஷெட் இந்தியாவின் இயக்குநர் பாத்திமாராஜ் தலைமை வகித்தார்.

ஒருங்கிணைப்பாளர் பி.ஜெய் எடில்பர்ட் முன்னிலை வகித்தார். இதில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே.பிரபு, சமூக செயற்பாட்டாளர்கள் புகழ், மேக்லின், திட்ட உதவியாளர் ஆர்.முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இது குறித்து ஷெட் இந்தியா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.ஜெய் எடில்பர்ட் கூறுகையில், “அவசர நிலை தேவைக ளுக்காக பிறரிடம் முன் பணம் வாங்குதல், நீண்ட நேரம் வேலை செய்ய நிர்பந்திக் கப்படுதல், குறைந்தபட்ச ஊதியம், குடும்பத்தினர் பார்க்க அனுமதிக்கப்படாத நிலை, உடல்சார்ந்த வன்முறைகள், உதவ யாருமில்லாத உணர்வு என கொத்தடிமை முறைகள் உள்ளன. தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில், சுமார் 60 ஆயிரம் கொத்தடிமைகள் மீட்கப் பட்டுள்ளனர். இதில், ஆடு, வாத்து மேய்ப்பது, செங்கல் சூளை போன்ற இடங்களில் கொத்தடிமையாக பணியாற்ற அமர்த்தப் படுவார்கள்.

தற்சமயம் காவிரி டெல்டா மாவட்டங்க ளான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலுார், புதுக்கோட்டை மாவட்டங்களில், வயல்கள், தோப்புகளில் வாத்து மேய்க்க கொத்தடிமை சிறுவர்கள், குடும்பத்தினர் அதிகளவு பயன்படுத்தப் படுகிறார்கள். குறிப்பாக, ஆண்டுதோறும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்டோர், அழைத்து வரப்பட்டு, வாத்து மேய்க்க அமர்த்தப்படுகின்றனர். அந்த சிறுவர்களுக்கு மொபைல் வழங்கப்படு கிறது, படிக்க வேண்டாம் என்ற ஆசை வார்த்தை கூறப்படுகிறது.

சிறுவர்களை அழைத்து வரும் நபர்கள், தங்களை குடும்ப உறுப்பினர்கள் என கூறச் சொல்லி மூளைச்சலவை செய்து வைத்துள்ளனர். பெற்றோரும் கடனுக்காக பிள்ளைகளை கொத்தடிமையாக அனுப்பியும் வைக்கின் றனர். இந்த சிறுவர்களை கண்டறிந்து அவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர்.

தஞ்சாவூரில் முதன்முறையாக கொத்தடிமை யாக இரண்டு சிறுவர்களை வைத்திருந்த ஆந்திராவை சேர்ந்த லெட்சுமணசுவாமிக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையை நீதிமன்றம் மூலம் கடந்த மே மாதம் பெற்றுத் தரப்பட்டது. அந்த சிறுவர்களுக்கு அரசு சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொத்தடிமைத் தொழிலா ளர்களை மீட்கும் பணியில் நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்” என்றார்.