தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொம்மிடியில் விரைவு ரயில்களை நிறுத்த கோரிக்கை

16 Jun 2026, 12:07 am
பொம்மிடியில் விரைவு ரயில்களை நிறுத்த கோரிக்கை

பொம்மிடியில் விரைவு ரயில்களை நிறுத்த கோரிக்கை

தருமபுரி, ஜூன் 15- தருமபுரி மாவட்டத்தின் முக்கிய போக்குவரத்து மையமாக விளங் கும் பொம்மிடி ரயில் நிலையத் தில் அதிவிரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்றும், பயணி கள் ரயில்களின் காலதாமதத்தைத் தவிர்க்க வேண்டும் என்றும் சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்குப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

சேலம் – ஜோலார்பேட்டை ரயில் பாதையில் அமைந்துள்ள பொம் மிடி ரயில் நிலையமானது பொம் மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத் தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரக் கிராம மக்களின் முக்கியப் போக்கு வரத்து ஆதாரமாக உள்ளது.

இங்கி ருந்து சென்னை, பெங்களூரு, கோவை மற்றும் அண்டை மாநிலங் களான கேரளம், ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு தினசரி ஆயிரக் கணக்கான விவசாயிகள், வியா பாரிகள் மற்றும் முறைசாரா தொழி லாளர்கள் பயணித்து வருகின்ற னர். விரைவு ரயில்களை நிறுத்த வலியுறுத்தியதால் தற்போது இந்த ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்கள் மட்டுமே நின்று செல்கின் றன; விரைவு ரயில்கள் எதுவும் நிற்ப தில்லை.

இதனால், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை எக்ஸ் பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், திரு வனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விரைவு ரயில்களைப் பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தி இயக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ள னர். மேலும், தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் இயக்கப்ப டும் ஈரோடு - ஜோலார்பேட்டை பய ணிகள் ரயில்கள் (வண்டி எண்கள்: 56108, 56812) தொடர்ந்து காலதாமத மாக இயக்கப்படுவதாக பயணி கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த ரயில்களை லோக்கூர் நிலையத் தில் மணிக்கணக்கில் நிறுத்தி வைப் பதைத் தவிர்த்து, பொம்மிடி ரயில் நிலையத்தில் 4-ஆவது நடை மேடை (லூப் லைன்) அமைத்து இயக்கினால் காலதாமதம் குறை யும். காலையில் இயக்கப்படும் ஈரோடு - ஜோலார்பேட்டை பயணி கள் ரயிலை, மேட்டூர் ரயில் புறப் படும் நேரமான காலை 5:00 மணிக்கு மாற்றியமைக்க வேண் டும் என்றும், இதன் மூலம் உழைப் பாளர்களின் வாழ்வாதாரமும், நேர மும் காக்கப்படும் என்றும் தென் மேற்கு சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்திற்குப் பொம்மிடி பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.