தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிணங்களின் மண்டை ஓடுகளை மெருகூட்டும் குண்டுகள் அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் - பேரா.விஜய் பிரசாத்

22 Feb 2026, 3:26 pm
பிணங்களின் மண்டை ஓடுகளை மெருகூட்டும்  குண்டுகள் அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம் - பேரா.விஜய் பிரசாத்

பிணங்களின் மண்டை ஓடுகளை மெருகூட்டும்  குண்டுகள் அணுஆயுதப் பேரழிவின் விளிம்பில் உலகம்

2026 பிப்ரவரி 5-ஆம் தேதி யுடன் ‘புதிய ராணுவ உத்திசார் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம்’ (New START) காலாவதியானது. இதன் மூலம் அமெரிக்கா  மற்றும் ரஷ்யாவின் அணுஆயுதக் கிடங்குகளைக் கட்டுப்படுத்தி வந்த கடைசிச் சட்டப்பூர்வத் தடையும் நீங்கிவிட்டது. 2010-ல் கையெழுத்தாகி 2011-ல் நடை முறைக்கு வந்த இந்த ஒப்பந்தம், ஒரு அடுத்த தொடர்ச்சியான ஒப்பந்தத்தின் மூலம் நீட்டிக்கப் பட்டிருக்க வேண்டும். அணுஆயுதங்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்துவது, இரு நாடுகளின் ஆயுதக் கிடங்குகளைப் பரஸ்பரம் ஆய்வு செய்வது என இது ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது. அந்த அரண் இப்போது தகர்ந்துவிட்டது.

உண்மையில், புதிய “ஸ்டார்ட்” ஒப்பந்தத்தின் வீழ்ச்சி திடீரென நடக்கவில்லை. கடந்த பத்தாண்டு களாக அமெரிக்க-ரஷ்ய உறவில் நிலவும் விரிசல் காரணமாக, 2020 முதல் கள ஆய்வுகள் நிறுத்தப் பட்டன. 2023-ல் ரஷ்யா இதில் தனது பங்க ளிப்பை நிறுத்திவைத்தது. தற்போது இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துவிட்ட தால், உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளும் எந்தக் கட்டுப்பாடும் இன்றி ஆயுதங் களைப் பெருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

தகர்க்கப்படும் பாதுகாப்பு உள்கட்டமைப்பு

2002-ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா ஒருதலைப் பட்சமாகப் பல அணுஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தங் களிலிருந்து வெளியேறி வருகிறது. இது உலகளாவிய பாதுகாப்புச் சமநிலையைச் சிதைத்துள்ளது:  • 1972-ன் வெகு ரக ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தம் (ABM)–அமெரிக்கா வெளியேறியது (ஜூன் 2002).  •    1987-ன் இடைக்கால அணுசக்திப் படைகள் ஒப்பந்தம் (INF) – அமெரிக்கா வெளியேறியது (ஆகஸ்ட் 2019). •    1992-ன் திறந்தவெளி வான் பாதுகாப்பு ஒப்பந்தம் (Open Skies) – அமெரிக்கா வெளியேறியது (நவம்பர் 2020). •    2011-ன் புதிய ஸ்டார்ட் (New START) – காலாவதி யானது (பிப்ரவரி 2026).

இந்த வெளியேற்றங்கள் ‘கவுண்டர்ஃபோர்ஸ்’ (Counterforce) எனப்படும் ஒரு கொடூரமான ராணு வக் கொள்கையின் ஒரு பகுதியாகும். அதாவது, எதிரி நாட்டின் நகரங்களைத் தாக்குவதற்குப் பதிலாக, அவர்களது அணுஆயுதத் தளங்களையும் ராணுவக் கட்டுப்பாட்டு மையங்களையும் நேரடியாகத் தாக்கு வது. இது பார்ப்பதற்குத் தர்க்கரீதியாகத் தெரிந்தாலும், உண்மையில் இது ‘முதலில் தாக்குதல் நடத்து வோருக்கே வெற்றி’ எனும் நிலையை உருவாக்குகிறது. இதனால் எதிரி நாடு தனது ஆயுதங்களை இழப்ப தற்கு முன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும் எனும் பதற்றத்திற்குத் தள்ளப்படுகிறது. நவீன ஏவுகணை கள் மற்றும் ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பங்கள் இந்த ஆபத்தை இன்னும் அதிகரிக்கின்றன. அணு ஆயுதப் போர் எது, சாதாரணப் போர் எது என்ற எல்லைக்கோடு சுருங்கிவிட்டது.

லாப வெறியும் அழிவுப் பாதையும்

இந்த அபாயகரமான அணுஆயுதக் கொள்கை களுக்குப் பின்னால் ஆயுதத் தயாரிப்பு நிறுவனங் களின் கொள்ளை லாபம் ஒளிந்துள்ளது. 2025-ஆம் ஆண்டு வெளியான ‘ஐகான்’ (ICAN) அறிக்கையின் படி, 2022 முதல் 2024 வரை உலகெங்கிலும் உள்ள 260 நிதி நிறுவனங்கள் அணுஆயுதத் தயாரிப்பில் ஈடு பட்டுள்ள 24 நிறுவனங்களுக்கு 514 பில்லியன் டாலர் முதலீடுகளை வழங்கியுள்ளன. ஏர்பஸ், போயிங், ஜெனரல் டைனமிக்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் போன்ற நிறுவனங்கள் இதில் பெரும் லாபம் ஈட்டுகின்றன. 2024-ஆம் ஆண்டில் மட்டும் ஒன்பது அணு ஆயுத நாடுகள் தங்கள் ஆயுதங்களுக்காக 100.2 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளன. இதில் தனியார் நிறு வனங்கள் மட்டும் 42.5 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளன. இந்தத் தொகையைக் கொண்டு ஐநா சபையின் வரவு செலவுத் திட்டத்தை 28 முறை ஈடு கட்ட முடியும்; அல்லது பட்டினியால் வாடும் 34.5 கோடி மக்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு உண வளிக்க முடியும். அணுஆயுதத் தொழில் என்பது மனித வளத்தின் ஆகப்பெரிய வீணடிப்பு ஆகும்.

அணுஆயுதப் பாரபட்சம்

தற்போதுள்ள சர்வதேச அமைப்புகள் பெரும்பாலும் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு உட்பட்டே செயல்படுகின்றன: •    அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் - NPT (1970)- ஒரு ‘அணுஆயுதப் பாரபட்ச’ முறையை உறுதிப் படுத்துகிறது. இது அணுஆயுத நாடுகளைக் களை வதற்குப் பதிலாக, மற்ற நாடுகள் அணுஆயுதங் களை அடையாமல் தடுப்பதிலேயே குறியாக உள்ளது. இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான் இதில் கையெழுத்திடவில்லை. •    சர்வதேச அணுசக்தி முகமையின் - IAEA (1957) -  ஆய்வுகள்  பெரும்பாலும் பாரபட்சமானவை. குறிப்பாக ஈரான் மீதான அதன் விசாரணைகள் ஆதாரங்களை விட, ஈரான் மீதான அமெரிக்காவின் பகையுணர்வால் தூண்டப்படுகின்றன. •    அணுசக்தி விநியோகக் குழு - NSG (1975) - என்பது தொழில்நுட்பப் படிநிலையை உருவாக்குகிறது. இது மற்ற நாடுகளின் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து, அணுஆயுத நாடுகளின் அதிகாரத்தைத் தக்கவைக்கிறது.

தெற்குலகின் எழுச்சியும் மாற்று முயற்சிகளும்

இது ஒரு புறம் இருக்க, அமெரிக்காவின் கட்டுப் பாட்டில் இல்லாத சில முக்கிய முயற்சிகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன. இவை பெரும்பாலும் தெற்குலக நாடுகளின் முன்னெடுப்புகளாகும்: • அணுஆயுதத் தடை ஒப்பந்தம் (TPNW - 2017): 99 நாடுகள் இதில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் அணுஆயுதங்கள் வைத்துள்ள எந்த நாடும் இதனை ஏற்கவில்லை. இது முக்கியமாகத் தெற்கு லக நாடுகளின் ஒரு கூட்டு முயற்சியாகும். •    அணுஆயுதமற்ற மண்டலங்கள் (Nuclear Weapon Free Zones): லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட ஐந்து பிராந்தி யங்கள் தங்களது எல்லைகளை அணுஆயுதமற்ற மண்டலங்களாக அறிவித்து ஒப்பந்தம் செய்துள் ளன. அணுஆயுதக் குறைப்பில் இவைதான் இன்று வரை கிடைத்துள்ள மிகச்சிறந்த வெற்றிகள்.

மூன்று பெரும் நெருக்கடிகள்

புதிய “ஸ்டார்ட்” ஒப்பந்தத்தின் வீழ்ச்சிக்குப் பின்  உலகம் மூன்று முக்கிய நெருக்கடிகளைச் சந்தித்து  வருகிறது : •    நிலைத்தன்மைக்கு நெருக்கடி (Crisis of Stability): ஆயுதக் கிடங்குகளை ஆய்வு செய்ய வழியில்லாத தால் நாடுகளுக்கு இடையே சந்தேகம் அதிகரித் துள்ளது. •    அங்கீகார நெருக்கடி (Crisis of Legitimacy): பெரும் நாடுகள் தாங்கள் ஆயுதங்களை ஒழிக்காமல், மற்ற நாடுகள் ஆயுதங்களை அடையக் கூடாது என்று கூறுவது அதன் அறத்தை இழக்கச் செய்கிறது. •    மனசாட்சி நெருக்கடி (Crisis of Conscience): அணு ஆயுதங்கள் போர்க்களத்தில் பயன்படுத்தக் கூடிய ஒரு சாதாரண ஆயுதத்தைப் போலப் பேசப்படுவது மிகப்பெரிய கொடுமையாகும். பாதுகாப்பு என்ற பெயரில் ஒட்டுமொத்த மனித குலத்தையே அழிக்க ஒரு சில நாடுகளுக்கு உரிமை உண்டு என்ற முரண்பாட்டை நாம் உடைக்க வேண்டும். 2003-ல் லிபியா தனது அணுஆயுதத் திட்டத்தைக் கைவிட்டது. ஆனால் எட்டே ஆண்டு களில் நேட்டோ (NATO) அந்நாட்டைத் தாக்கிச் சிதைத் தது. இதைக் கண்ட வடகொரியா (DPRK) தனது பாது காப்பிற்காக அணுஆயுதங்களை உருவாக்க முடிவு  செய்தது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக் கொள்கையே மற்ற நாடுகளை இத்தகைய தற்காப்பு அரண்களைக் கட்டத் தூண்டுகிறது.

2003-ல் பிரிட்டிஷ் நாடக ஆசிரியர் ஹரால்ட் பிண்ட்டர் (Harold Pinter), பயங்கரவாதத்திற்கு எதி ரான போர் என்ற பெயரில் நடந்த அவலங்களைக் கண்டு ‘குண்டுகள்’ (The Bombs) என்ற கவிதையை எழுதி னார். அந்தக் கவிதை அணுஆயுதப் பேரழிவின் பயங்கரத்தை இவ்வாறு படம்பிடிக்கிறது:. “சொல்லப்படுவதற்கு இனி வார்த்தைகள்     ஏதுமில்லை மிஞ்சியிருப்பது குண்டுகள் மட்டுமே அவை நமது தலைகளுக்குள்ளிருந்து வெடிக்கின்றன மிஞ்சியிருப்பது குண்டுகள் மட்டுமே அவை நமது கடைசித் துளி இரத்தத்தையும்     உறிஞ்சுகின்றன மிஞ்சியிருப்பது குண்டுகள் மட்டுமே அவை பிணங்களின் மண்டை ஓடுகளை     மெருகூட்டுகின்றன.” அணுஆயுதங்கள் அமைதிக்கான வழி அல்ல; அவை அதிகாரத்தைத் தக்கவைக்கும் கருவிகள் மட்டுமே. இந்தக் குண்டுகள் வெடிப்பதற்கு முன்பாக,  மனிதகுலத்தின் கூட்டு மனச்சாட்சி விழித்தெழ வேண்டும்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.