தீக்கதிர் முக்கிய செய்திகள்
6 Jan 2026, 4:23 pm

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்: நாளை முதல்வர் தொடங்கி வைக்கிறார்

சென்னை: பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3 ஆயிரம் ரொக்கப் பணம் வழங்கும் திட்டத்தை ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கலை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். பரிசுத் தொகுப்பில் வழங்கப்பட உள்ள பச்சரிசி, சர்க்கரை ஆகியவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளிலிருந்து நியாய விலைக் கடைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், கரும்பு கொள்முதல் செய்யும் பணி நடை பெற்று வருகிறது. பொங்கல் பரிசு ஜன.8 ஆம் தேதி முதல் வழங்கப்பட உள்ள நிலையில், தற்போது வீடுகளுக்கே சென்று அதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. நியாய விலைக் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. வியாழக்கிழமை (ஜன.8) வரை டோக்கன் வழங்கப் படும். பின்னர், அந்தந்த நியாய விலைக் கடைகளில் ஜன.13 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசுப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமையும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரேசன் கடைகள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு தல்களையும் அரசு வெளியிட்டுள்ளது.

61 அதிநவீன விரைவு பேருந்துகள் சேவை தொடக்கம்

சென்னை: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் ரூ.37.98 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பேருந்து களின் சேவையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை சென்னை தீவுத்திடலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக் கும், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங் களின் முக்கிய நகரங்களுக்கும் அதி நவீன சொகுசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு நவீன தொழில் நுட்பத்துடன்கூடிய இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட 110 புதிய பேருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிய பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் எளிதாக பயணிக்கும் வகை யில் சிறப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சா.சி.சிவசங்கர், பி.கே. சேகர்பாபு, மேயர் பிரியா, போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா ளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன், மாநகர போக்கு வரத்துக் கழக இணை மேலாண் இயக்குநர் சுந்தரபாண்டி யன், உயர் அலுவலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பொங்கலுக்கு 34,084 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, 34,084 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. வழக்கமாக இயக்கப் படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக அரசு போக்கு வரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் துறையின் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப் படும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் ஒரு முன்பதிவு மையம் அமைக்கப்படும். பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வோர் இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். பொங்கல் முடிந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பொங்கல் முடிந்து திரும்பும் பயணிகளுக்காக ஜன.16 முதல் 19 வரை மொத்தமாக 25,008 பேருந்துகள் இயக்கப்படும். பொங்கலுக்காக தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் ஊருக்குச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, ஓஎம்ஆர், திருப் போரூர், கேளம்பாக்கம், செங்கல்பட்டு வழி, அல்லது வண்ட லூர் வெளிச்சுற்று சாலையை தேர்வு செய்யலாம் என்றார்.

4 மாவட்ட நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜன.6- தமிழகத்தில் நான்கு மாவட்ட நீதிமன்றங் களுக்கு வெடிகுண்டு மிரட் டல் விடுக்கப்ப ட்டுள்ளதை யடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவியது. பெரம்பலூர், கிருஷ் ணகிரி, ராணிப்பேட்டை, சேலம் ஆகிய நான்கு மாவட்ட நீதிமன்றங் களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் வெடி குண்டு மிரட்டல் விடுக்கப் பட்ட நிலையில் போலீசார் சோதனையில் ஈடுபட்ட னர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து நான்கு நீதிமன்றங்களி லும் பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞர்களை அவ சர அவசரமாக வெளி யேற்றி போலீசார் விசா ரணை நடத்தினர். இத னால் நீதிமன்ற வளாகங் களில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.