திருப்பூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
17 Feb 2026, 3:36 pm
<p><strong>திருப்பூர் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்</strong></p>
<p>திருப்பூர், பிப்.17- திருப்பூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து செவ்வாயன்று வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகே ஒருங்கிணைந்த மாவட்ட நீதி மன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் செவ்வாயன்று வழக்கம்போல் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்பான பணிகள் நடைபெற்றது. அப்போது நீதிமன்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு “கோர்ட்டு வளாகத் தில், உள்ள கழிவறையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வும், சற்று நேரத்தில் அது வெடிக்கும் என அதில் கூறப்பட்டிருந் தது. இதையடுத்து வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு காவல்துறையினர் மோப்ப நாய் புல்லட் மற்றும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் கோர்ட்டு வளாகத்தில் சோதனை நடத் தினர். மேலும், வழக்கு தொடர்பாக வந்த பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப் பட்டனர். இந்த சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்க வில்லை. அதன் பின்னர் வெடிகுண்டு மிரட்டல் வதந்தி என்பது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பூர் மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.</p>
