தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

18 Mar 2026, 3:34 pm
திருச்சி விரைவு செய்திகள்

மின் கம்பத்தில் இருந்து தவறி விழுந்த ஊழியர் படுகாயம்

நாகர்கோவில். மார்ச். 18- கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி அருகே அணைமுகம் பகுதியில் மின்கம்பத்தில் ஏரி பழுது பார்த்துக் கொண்டிருந்த களியல் மின்வாரிய ஊழியர் மகேஷ் என்பவர் தவறி கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.  அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது.

வடசேரி பேருந்து நிலையம் அருகில் விபத்து

நாகர்கோவில் .மார்ச் 18 - நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் விபத்து ஏற்பட்டது. திருவனந்தபுரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு பயணிகளை ஏற்றி வந்த கேரள அரசு பேருந்து வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள வளைவில் வரும் போது இருசக்கர வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட போது இருசக்கர வாகனத்தில் வந்தவரை இடித்து தள்ளியதில் ஒழுகினேசரி பகுதியை சேர்ந்த விநாயகம் 60 என்பவரின் கால் பகுதியில் முறிவு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கேரள அரசு பேருந்து ஓட்டுனர் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடி காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குமரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு நான்காவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

நாகர்கோவில். மார்ச் .18 - கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந் துள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு இ மெயில் மூலம் மீண்டும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். இரண்டு மாதங்களில் நான்காவது முறையாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது-புதனன்று விடுக்கப்பட்ட வெடி குண்டு மிரட்டலும் போலி என போலீசாரின் சோதனைக்கு பிறகு தெரியவந்தது, தொடர்ந்து நான்கு முறை இந்த ஆண்டில் மட்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது, மிரட்டல் கொடுத்த நபர் யார் என்று தெரியவில்லை .

87 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: செங்கோட்டை அருகே இருவர் கைது

தென்காசி, மார்ச் 18- செங்கோட்டை அருகே விற்பனைக்காக பதுக்கி வைத்தி ருந்த 87 கிலோ புகை யிலைப் பொருட்களை பறி முதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா ஆகியவற்றின் புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி எஸ்பி. ஜி.எஸ்.மாதவன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திங்களன்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் தேன்பொத்தை வைரவன் என்பவரது மகன் திருமலைக்குமார் (27), விஸ்வநாதபுரம் தங்கராஜ் என்பவரது மகன் ராஜேஷ் குமார் (29) ஆகியோர் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 87 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைத் தொடர்ந்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். . தொ டர்ந்து அவர்களிடம், புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கி வரப்பட்டது. இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது  குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உரிமை கோரப்படாத  202 வாகனங்கள் ஏலம் ரத்து

தென்காசி, மார்ச் 18- தென்காசி மாவட்டத்தில் உரிமை கோரப்படாத நிலையில் காவல் துறையில் இருந்து வரும் 202 மோட்டார் வாகனங்க ளுக்கான பொது ஏலத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தென்காசி மாவட்டம், புளியங்குடி உட்கோட்ட காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 197 இருசக்கர வாகனங்களும் 3 மூன்று சக்கர வாகனங்களும் 2 நான்கு சக்கர வாகனங்களும் சேர்ந்து மொத்தம் 202 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் வருகின்ற 23.03.2026 ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணிவரை சொக்கம்பட்டி காவல்நிலைய வளாகத்தில் வைத்து நடைபெற இருந்தது. தற்சமயம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்  ஏப்ரல் 23 அன்று நடைபெற இருப்பதால், மேற்கண்ட வாகனங்களுக்கான ஏல அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருவதால், ஏலதாரர்கள் பணத்தை ரொக்கமாக கொண்டு வருவதில் இருக்கின்ற சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்த பின்னர் மேற்கண்ட வாகனங்களுக்கான ஏலம் மற்றொரு தேதியில் அறிவிக்கப்பட்டு நடைபெறும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் எதிரொலி வாசுதேவநல்லூரில் 3 சோதனை சாவடிகள் 9 பறக்கும் படைகள் கண்காணிப்பு

தென்காசி,மார்ச் 18- தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தேர்தலை ஓட்டி மூன்று சோதனை சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. 9 பறக்கும் படைகள் கண்கா ணிப்பு பணிகளை தொடங்கியுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட புளியங்குடி, வேலாயுதபுரம், தேவிப்பட்டணம் ஆகிய மூன்று இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப் பட்டு தீவிர சோதனை. மேற்கொண்டு வருகின்றனர். வாசுதேவநல்லூர் அருகேயுள்ள வேலா யுதபுரம் சோதனை சாவடியில் பிடிஓ மல்லிகா தலைமையில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர். திருவேங்கடம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனைகளில் ஈடுபட்டனர். இதுபோல் 9 பறக்கும் படையினர் தங்கள் பணிகளை தொடங்கினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து சங்கரன்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவேங்கடம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பறக்கும் படை அதிகாரி ஹரிவிக்னேஷ் தலைமை யில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் இருசக்கர வாகனம், கார், பஸ், வேன் உள்ளிட்ட நான்கு சக்கர வாக னத்தில் ரூ.50 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் ரொக்கம் கொண்டு செல்கிறார்களா என்றும், பரிசு பொருட்கள் கொண்டு செல்கி றார்களா என்றும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதில் பணம் எதுவும் சிக்கவில்லை என்று பறக்கும் படை குழுவினர் தெரிவித்தனர்.

புதுப்பட்டி ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்

தென்காசி, மார்ச் 18- தென்காசி மாவட்டம் புதுப்பட்டி ஊராட்சி செயலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பட்டி ஊராட்சியில் ராஜேஷ் என்பவர் ஊராட்சி செயலராகப் இருந்து வந்தார். இவர் மத்திய அரசு கொண்டு வந்த ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடமிருந்து வசூல் செய்த பணத்தை  அரசுக்கு செலுத்தாமல் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்த அதிகாரிகள் விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் ஊராட்சி செயலாளர் ராஜேசை பணியிடை நீக்கம் (சஸ்பென்ட்) செய்து உத்தரவு பிறப்பித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.