தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் உலக செய்திகள்

16 May 2026, 9:10 pm
தீக்கதிர்  உலக செய்திகள்

எபோலா வைரஸ் பரவல் எல்லைக் கண்காணிப்பு தீவிரம்

ஆப்பிரிக்கா கண்டத்தில் மீண்டும் எபோலா வைரஸ் பரவ துவங்கியுள்ள நிலையில் எல்லை மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து கண்காணிப்புகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. எல்லை கடந்த கண்காணிப்பு, சுகா தார தற்காப்பு, தடுப்பு நட வடிக்கைகளை வலுப்படுத்து வதற்காக காங்கோ, உகாண்டா, தெற்கு சூடான் நாடுகளின் சுகாதார அதிகாரிகள், ஐ.நா முகமைகள் பிற முக்கிய நாடுகளுடன் இணைந்து அவசர உயர்மட்டக் கூட்டத்தைக் கூட்டவுள்ளதாக தெரி வித்துள்ளது.காங்கோ நாட்டில் இதுவரை 246 பேருக்கு எபோலா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 80 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அண்டை நாடுகளிலும் சிலருக்கு தொற்று உள்ளதாக கூறப்படுகிறது.

சீனா செல்கிறார் ரஷ்ய ஜனாதிபதி புடின்

ரஷ்ய ஜனாதிபதி புடின் மே 19 அன்று இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகச் சீனாவுக்குச் செல்ல விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பயணத்தின் போது, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு குறித்தும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் புடின் பேச்சுவார்த்தை நடத்து வார்.பின் இரு நாட்டுத் தலைவர்களும் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்தி டுவார்கள் என தெரிவிக்கப் பட்டுள்ளது. டிரம்ப் சீனா சென்று அமெரிக்கா திரும்பிய மறுதினமே ரஷ்ய ஜனாதி பதி சீனா செல்வதாக அறிவிப்பு வந்துள்ளது குறிப்பி டத்தக்கது.

நிலத்தைப் பறிக்கும் சட்டத்தை திரும்பப் பெறு! பொலிவிய அரசை நடுங்க வைக்கும் மக்கள் போராட்டம்

லா பாஸ், மே 16- பழங்குடி மற்றும் விவசாயிகளின் நிலங்களை பறித்து கார்ப்பரேட் நிறுவ னங்களுக்கு கொடுக்கும் வகையில் பொலிவிய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்த சட்டத்திற்கு எதிராக அந்நாட்டு தொழிற்சங்கங்கள் மக்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தையும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியா வில், பழங்குடியின மக்களின் நில உரிமை களைப் பறிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ‘சட்டம் 1720’-க்கு (Law 1720) எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

நிலம் என்பது வெறும் விற்பனைப் பொருள் அல்ல, அது எங்களின் வாழ்க்கை மற்றும் கௌரவம் என கூறி அமேசான் காடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சாரை சாரையாக தலைநகர் நோக்கி நடை பயணம் துவங்கியுள்ளனர்.

இந்த பயணத்திற்கு ஆதரவு தரும் வகையில் தொழிலாளர்கள், பழங்குடி யினர், சுரங்கத் தொழிலாளர்கள் இணை த்து நாடு தழுவிய காலவரையற்ற பொது வேலை நிறுத்தத்தை துவங்கியுள்ளனர்.

மக்களுக்கு விரோதமாக சட்டம் கொண்டு வந்துள்ள ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் பதவி விலக வேண்டும் என்பதே இப் போராட்டத்தின் ஒற்றை இலக்காக உள்ளது.

வேலைநிறுத்தம் பொலிவியாவின் மத்திய தொழிலா ளர் சங்கம் (COB), விவசாயத் தொழிலா ளர்களின் தேசிய கூட்டமைப்பு (CSUTCB), சுரங்கத் தொழிலாளர்களின் சங்கம் (FSTMB) என பொலிவியாவின் மிக வலிமை யான தொழிற்சங்கங்கள் அமேசான் மற்றும் வடக்கு பொலிவியாவில் வாழ்ந்து வரும் பல்வேறு பழங்குடியின இனக்குழுக் கள் உள்ளூர் பழங்குடியின அமைப்புகள் பல்வேறு சமூக அமைப்புகளும் இணைந்து இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துள்ளன.

மாற்ற அனுமதிப்பதன் மூலம், நிலங்களை அடமானம் வைக்க வழிவகை செய்கிறது.

ஆனால், இதன் மறைமுக நோக்கமே பழங்குடியினரின் நிலங்களை சட்டரீதியாக கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் பண்ணையாளர்களும் கையகப்படுத்த வழிவகை செய்வது தான் என மக்கள் கூறு கின்றனர். காலங்காலமாக நிலத்தைத் தனது அடையாளமாகவும், வாழ்வாதாரமாகவும் கருதும் பழங்குடியினருக்கு இச்சட்டம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக வந்துள்ளது.

பெனி (Beni), பாண்டோ (Pando) ஆகிய அமேசான் பகுதிகளிலிருந்து சுமார் 20 நாட்களுக்கும் மேலாக மக்கள் கடும் குளிரிலும், மழையிலும் நடந்து வந்து தலை நகர் லா பாஸை (La Paz) அடைந்துள்ள னர். நாட்டின் பத்து முக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து ஜனாதிபதி ராஜினாமா செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடைபயணம் உறைபனி மற்றும் அதிக உயரத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நடந்ததால், நடைபயணத்தில் பங்கேற்றுள்ள பலருக்கு நீர்ச்சத்து குறைபாடு, உடல் சோர்வு ஏற் பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்ட பழங்குடி யினர் கடந்த வாரம் அவசர மருத்துவ சிகிச்சை பெற வேண்டிய சூழல் வந்தது. எனினும் மக்கள் யாரும் போராட்டத்தில் இருந்து விலகவில்லை.

உறுதியோடு தலைநகரை நோக்கி நடந்து செல்கின்றனர். நில உரிமையைப் பறிக்கும் சட்டம் 1720-ஐ ரத்து செய்ய வேண்டும்.

விவசாயிகளின் நலன்களைப் புறக்கணித்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகச் செயல்படும் ஜனாதிபதி ரோட்ரிகோ பாஸ் பதவி விலக வேண்டும். பழங்குடியினரின் கூட்டு நில உரிமையை (TCOs) தனித்தனியாகப் பிரிக்கக் கூடாது.

நிலம் விற்பனைக்கு உரியது அல்ல என்பதை உறுதி செய்ய வேண்டும். எரிபொருள் மானியங்களைக் குறைக்கக் கூடாது என்ற கோரிக்கைகளை மக்கள் முன்வைத்துள்ளனர். மக்கள் நடத்தி வரும் இந்தப் போ ராட்டத்தை காவல்துறை மூலமாக அரசு முடக்க பார்க்கிறது.

இதனால் நாட்டின் தலைநகர் உட்பட பல இடங்களில் போ ராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இத்தகைய சூழல்கள் அந்நாட்டு அரசை மிகப்பெரிய நெருக்கடிக்கு உள்ளாக்கி யுள்ளது.

சுரங்கத் தொழிலாளர்கள் முதல் அமேசான் பழங்குடியின மக்கள் வரை அனைவரும் ஒன்றிணைந்து நிற்பது பொலி வியாவில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற் கான அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.