தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நெருக்கடியின் சந்திப்பில் பொலிவியா பிளவு மற்றும் ஏகாதிபத்திய பேராசையின் முற்றுகை - பேராசிரியர் விஜய் பிரசாத்

7 Jun 2026, 10:12 pm
நெருக்கடியின் சந்திப்பில் பொலிவியா பிளவு மற்றும் ஏகாதிபத்திய பேராசையின் முற்றுகை - பேராசிரியர் விஜய் பிரசாத்

நெருக்கடியின் சந்திப்பில் பொலிவியா பிளவு மற்றும் ஏகாதிபத்திய பேராசையின் முற்றுகை - பேராசிரியர் விஜய் பிரசாத்

லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியா தற்போது கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், அரசியல் பிளவுகள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட ஏகாதிபத்திய தலையீடுகளின் ஆபத்தான சங்கமத்தை எதிர்கொண்டுள்ளது.

எரிபொருள் பற்றாக்குறை, பணவீக்க அழுத்தம், நாணய மதிப்பின் வீழ்ச்சி மற்றும் அதிகரித்து வரும் மக்கள் கொந்தளிப்பு ஆகியவற்றில் இந்த உடனடி நெருக்கடி வெளிப்படையாகத் தெரிகிறது.

பெட்ரோல் நிலையங்களில் நீண்டு நிற்கும் வரிசைகள் நாட்டின் பரவலான நிச்சயமற்ற தன்மையின் அடையாளங்களாக மாறியுள்ளன.

அன்னியச் செலாவணி இருப்பு சரிந்துவிட்டதால், இறக்குமதிச் செலவுகள் அதிகரித்து, பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அரசின் திறனுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.

பொலிவியாவின் ஆளும் வர்க்கப் பிரபுக்கள் (oligarchy) இந்தச் சிக்கல்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, இடதுசாரித் தலைவர் தோழர் ஈவோ மொரேல்ஸ் காலத்தில் தொடங்கப்பட்ட சோசலிசத் திட்டம் தோல்வியடைந்துவிட்டதாகச் சித்தரிக்க முயல்கின்றனர். இருப்பினும், இத்தகைய வாதங்கள் உலகளாவிய சூழலையும் கடந்த 20 ஆண்டுகளில் பொலிவியா அடைந்த சாதனைகளையும் திட்டமிட்டு மறைக்கின்றன.

நவதாராளவாத ஆட்சிக் காலத்திலிருந்து மரபாக வந்த கட்டமைப்பு பலவீனங்கள் மற்றும் உலகளாவிய பணவீக்கத்தால்தான் பொலிவியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பொலிவியாவின் இந்த அரசியல் நெருக்கடி, உள்நாட்டுப் பிளவுகளாலும் வெளிப்புற அழுத்தங்களாலும் லத்தீன் அமெரிக்காவின் முற்போக்குத் திட்டங்கள் எவ்வளவு எளிதாகப் பலவீனமடைகின்றன என்பதை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது.

அங்கு நடப்பது வெறும் தேர்தல் போட்டியோ அல்லது ஆளும் கட்சியான “சோசலிசத்திற்கான இயக்கம் (MAS) “கட்சிக்குள் நடக்கும் தற்காலிக மோதலோ அல்ல.

இது லத்தீன் அமெரிக்க இடதுசாரிகளின் எதிர்காலம், அதி முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களின் மீதான கட்டுப்பாடு மற்றும் இப்பிராந்தியத்தில் ‘இளஞ்சிவப்பு அலை’ (Pink Tide) மூலம் பெற்ற நன்மைகளை மாற்றியமைக்க அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மேற்கொள்ளும் பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இடதுசாரிகளுக்குள் வெடித்த நெருக்கடி பொலிவியாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல் நெருக்கடியின் மையப்புள்ளியாக விளங்குவது எம்ஏஎஸ் (‘MAS’) கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கசப்பான மோதலாகும். ஜனாதிபதி லூயிஸ் ஆர்ஸ் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் ஜனாதிபதி ஈவோ மொரேல்ஸ் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிளவு, லத்தீன் அமெரிக்காவின் மிக வலுவான மக்கள் இயக்கத்தை பலவீனப்படுத்தியுள்ளது. வலதுசாரி சக்திகளுக்கு எதிராக ஒரு ஐக்கிய முன்னணியை நிலைநிறுத்துவதற்குப் பதிலாக, இந்த இயக்கம் தலைமைப் போட்டி மற்றும் உத்திகள் குறித்த உள்நாட்டு மோதல்களால் சிதைந்து போனது.

இந்த வரலாற்றுத் தவறுதான் 2025 தேர்தலில் வலதுசாரிகள் வெற்றிபெற வழிவகுத்ததுடன், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் வர்க்கப் பிரபுக்கள் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றக் காரணமாய் அமைந்தது.

இந்தத் துரோகப் பிளவைப் புரிந்து கொள்ள, பொலிவிய இடதுசாரிகளின் வரலாற்றை நினைவுகூர வேண்டும். “சோசலிசத்திற்கான இயக்கம்” (‘MAS’) கட்சியின் எழுச்சி என்பது ஒரு பாரம்பரிய அரசியல் கட்சியால் உருவானதல்ல. அது தண்ணீர், எரிவாயு மற்றும் பிற அதி முக்கியத்துவம் வாய்ந்த வளங்களைத் தனியார்மயமாக்குவதற்கு எதிராக உள்ளூர் பழங்குடி மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் நடத்திய மாபெரும் மக்கள் போராட்டங்களிலிருந்து முளைத்தது. 2

000-ஆம் ஆண்டின் கொச்சபாம்பா தண்ணீர் போரும் (Cochabamba Water War), 2003-ஆம் ஆண்டின் எரிவாயு போரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான மக்களின் கூட்டு அதிகாரத்தை நிரூபித்தன. இந்தப் போராட்டங்கள்தான் 2006-ல் அய்மாரா (Aymara) பழங்குடித் தொழிற்சங்கத் தலைவரான ஈவோ மொரேல்ஸை ஜனாதிபதி நாற்காலியில் அமர்த்தின. மொரேல்ஸின் சாதனைகளும் 2019 சதியும் 14 ஆண்டுகால மொரேல்ஸ் ஆட்சியில் பொலிவியா வியக்கத்தக்க மாற்றங்களைக் கண்டது. வறுமை மற்றும் தீவிர வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டது. பழங்குடி மக்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவமும் அரசியலமைப்பு அங்கீகாரமும் வழங்கப்பட்டன. பொருளாதாரத்தின் முதன்மை முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன. இயற்கை வளங்கள் மூலம் கிடைத்த வருவாய் சமூகத் திட்டங்கள், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்திற்குத் திருப்பிவிடப்பட்டது. 1980 மற்றும் 90-களில் திணிக்கப்பட்ட நவதாராளவாதக் கொள்கைகளை மக்கள் பங்கேற்புடன் மொரேல்ஸ் தகர்த்தெறிந்தார். இதனால்தான் பல லட்சக்கணக்கான உழைக்கும் மக்களின் மனதில் மொரேல்ஸ் இன்றும் கண்ணியம் மற்றும் இறையாண்மையின் அடையாளமாக வாழ்கிறார். அவரது இந்த மக்கள் செல்வாக்குதான் ஆளும் வர்க்கத்தின் வன்மத்தைத் தூண்டியது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ராணுவச் சதி இதன் உச்சக்கட்டமாகும். ஜனநாயகத்தைக் காப்பதாகக் கூறிக்கொண்டு களம் இறங்கிய வலதுசாரிகள் மற்றும் வெளிநாட்டுச் சக்திகளின் உண்மையான நோக்கம், பொலிவியாவின் பிரம்மாண்டமான லித்தியம் (Lithium) இருப்பு மீது குறி வைத்து, வாயில் நீர் ஒழுக விழுங்கத் துடிக்கும் டெஸ்லாவின் எலான் மஸ்க் போன்ற கார்ப்பரேட்டுகளின் பொருளாதார நலன்களைப் பாதுகாப்பதே ஆகும்.

அந்தச் சதியின் ஒரு பகுதியாக ராணுவ அரசு பழங்குடியினரின் அடையாளங்களை அழித்து, மக்கள் இயக்கங்களை ஒடுக்கியது. பின்னர் நடந்த தேர்தல்கள் மூலம் எம்ஏஎஸ் (‘MAS’) கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும், அந்தச் சதி ஆழமான வடுக்களை ஏற்படுத்தியது.

அது இடதுசாரி பிரிவுகளுக்கு இடையே பரஸ்பர அவநம்பிக்கையை விதைத்தது. அதன் விளைவாகவே, இருபது ஆண்டுகளுக்கு முன்பு 2005-ல் ஆட்சியை இழந்த ஆளும் வர்க்கம், தற்போது மீண்டும் வாக்குப்பெட்டி மூலம் அதிகாரத்திற்கு வந்துள்ளது. கோப அலையும் இயற்கை வளங்களின் மீதான போரும் இந்த நெருக்கடியின் ஆபத்து பொலிவியாவைத் தாண்டியும் பரவியுள்ளது.

லத்தீன் அமெரிக்கா முழுவதும் ஒரு புதிய போராட்டச் சுழற்சி நடந்து வருகிறது. முற்போக்கு அரசாங்கங்கள் பல நாடுகளில் ஆட்சிக்கு வந்தாலும், அவை ஊடக ஏகபோகம், நீதித்துறை செயல்பாடுகள் மற்றும் வெளிநாட்டுத் தலையீடுகளால் கடுமையான சூழலை எதிர்கொள்கின்றன. அமெரிக்கா இன்னும் லத்தீன் அமெரிக்காவைத் தனது புவிசார் அரசியல் போட்டித் தளமாகவே பார்க்கிறது. சமகால ஏகாதிபத்தியம் என்பது எப்போதும் ராணுவப் படையெடுப்பாக மட்டுமே வருவதில்லை; அது நிதி நிறுவனங்கள், தடைகள், ஊடகப் பிரச்சாரங்கள் மற்றும் உள்ளூர் கைக்கூலிகள் மூலம் நவதாராளவாதக் கொள்கைகளை மீண்டும் நிலைநிறுத்த முயல்கிறது. இந்த உத்தியில் பொலிவியா மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. உலகின் மிகப்பெரிய லித்தியம் இருப்பைக் கொண்டுள்ள நாடு இதுவாகும்.

உலகளாவிய எரிசக்தி மாற்றத்திற்கு லித்தியம் மிக இன்றியமையாதது என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் பொலிவிய இடதுசாரிகளை ஓரங்கட்டத் துடிக்கின்றன. முற்போக்கு இயக்கம் பிளவுபட்டு பலவீனமடையும் போது, வெளிநாட்டு மூலதனம் இந்த துறைகளை எளிதாகக் கைப்பற்றிவிடும். பொலிவியா தற்போது ஒரு வரலாற்றுச் சந்திப்பில் நிற்கிறது. ஒரு பாதை, கடந்த இரு தசாப்தங்களாக நாட்டை மாற்றியமைத்த சமூகச் சக்திகளை மேலும் துண்டாக்கி பலவீனப்படுத்துவதை நோக்கியது.

மற்றொரு பாதை, அரசியல் முதிர்ச்சி, ஒற்றுமை மற்றும் மக்கள் இயக்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டுவந்த அடிப்படைக் கோரிக்கைகளுக்கான கூட்டு அர்ப்பணிப்பை நோக்கியதாகும். பொலிவியாவின் இடதுசாரி வெற்றிகள் என்பவை தனிநபர் பலத்தால் சாத்தியமானவை அல்ல; அவை தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடியின சமூகங்கள் மற்றும் பெண்களின் கூட்டு அதிகாரத்தால் விளைந்தவை.

மண்ணின் இறையாண்மைக்கும் ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கும், உழைக்கும் வர்க்க ஜனநாயகத்திற்கும் ஆளும் வர்க்கப் பிரபுத்துவத்திற்கும் இடையே நடக்கும் இந்தத் தீர்க்கமான போராட்டத்தில், மக்கள் பிரிவினர் தங்களின் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதைப் பொறுத்தே பொலிவியா மற்றும் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவின் எதிர்காலம் அமையப் போகிறது. பீப்பிள்ஸ் டெமாக்ரசி (7.6.26) தமிழில் சுருக்கம் : எஸ்.பி.ஆர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.