பாரம்பரிய மேளத்தைப் பாதுகாக்க வேண்டும் போகி மேளத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை
6 Jan 2026, 4:23 pm
<p><strong> பாரம்பரிய மேளத்தைப் பாதுகாக்க வேண்டும் போகி மேளத் தயாரிப்பாளர்கள் கோரிக்கை</strong></p>
<p>செங்கல்பட்டு, ஜன.6- செங்கல்பட்டு மாவட் டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கொத்தி மங்கலம் கிராமத்தில், 30-க்கும் மேற்பட்ட குடு ம்பங்கள் பாரம்பரிய முறையில் போகி மேளம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மாட்டுத் தோல், பானை ஓடு மற்றும் சுண்ணாம்பு கொண்டு கலைநயத்துடன் உருவாக்கப்படும் இந்த மேளங்கள், காலங்காலமாக போகிப் பண்டிகையின் அடையாளமாக விளங்கு கின்றன. இருப்பினும், சமீப காலமாக சந்தையில் பெருகி வரும் பிளாஸ்டிக் மேளங்களின் வரவால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக இத்தொழி லாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். முத லீட்டிற்குப் போதிய கடனு தவி இல்லாததால், அதிக வட்டிக்குக் கடன் வாங்கித் தொழிலைத் தொடரும் நிலை உள்ளதாகவும், இறுதியில் நட்டமே மிஞ்சு வதாகவும் அவர்கள் வேத னைப்படுகின்றனர். எனவே, சுற்றுச்சூழ லுக்குத் தீங்கான பிளாஸ்டிக் மேளங்களைத் தடை செய்ய அரசு முன்வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், அரசு தங்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்க வேண்டும் என்றும், தாங்கள் தயாரிக்கும் மேளங்களுக்கு உரிய விலையை நிர்ண யித்து அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
