தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திருச்சி விரைவு செய்திகள்

9 Mar 2026, 4:24 pm
திருச்சி விரைவு செய்திகள்

வாகன விபத்தில் ஒருவர் பலி

இராஜபாளையம், மார்ச் 9- இராஜபாளையத்தை அடுத்த ரெட்டியபட்டி பகுதி யில் இரு சக்கர வாகன விபத்தில் தெய்வேந்திரன் (54) உயி ரிழந்தார். அவர் தனியார் நூற்பாலை மில்லில் பணியாற்றி யவர்; மனைவி சித்ரா (42) மற்றும் மகன் இந்திரன் உள்ளனர். தெய்வேந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல்  சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு  சென்றனர், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சித்ரா கொடுத்த புகாரின் பேரில் கீழராஜகுலராமன் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கள் விற்ற 2 பேர் கைது

இராஜபாளையம், மார்ச் 9- இராஜபாளையம் வடக்கு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ராஜ்குமார் நடத்திய சோதனையில், மம்சா புரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரனை (25) அரசால் தடை செய்யப்பட்ட கள் விற்பனை செய்ததாகக் கைது செய்து, அவரிடமிருந்து 3 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தளவாய்புரம் காவல் சார்பு ஆய்வாளர் அசையா மணி விலக்கு அருகே ரோந்து சென்றபோது, முகவூரைச் சேர்ந்த ஹரிஹர பிரகாஷ் (19) என்பவர் கள் விற்பனை செய்ய வைத்திருந்தார் என கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து சுமார் 3 லிட்டர் கள் பறி முதல் செய்யப்பட்டது. இரு சம்பவங்களுக்கும் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கஞ்சா விற்க முயன்றவர் கைது

இராஜபாளையம், மார்ச் 9- இராஜபாளையத்தை அடுத்த சுந்தர்ராஜ்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சேத்தூர் ஊரக  காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜோதி, பள்ளி அருகே நின்ற ஜெயராம் (27) என்பவரை விசாரித்தபோது, அவர்  கஞ்சா விற்பனை செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, அவரிடமிருந்து சுமார் 20 கிராம்  கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, ஜெயராமை நீதிமன்றத்  தில் ஆஜர்படுத்தினர்.

அழகர் கோவில் இணை ஆணையராக ஹரிஹரன் பதவியேற்பு

மதுரை, மார்ச் 9- மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் நிர்வாகம் கடந்த மாதம் 23 ஆம் தேதி துணை ஆணையர் அந்தஸ்திலி ருந்து இணை ஆணையர் தரத்திற்கு உயர்த்தப்பட்டு அரசாணை வெளி யிட்டது. இதனைத் தொடர்ந்து வடபழனி கோவிலில் துணை ஆணைய ராக பணியாற்றி வந்த ஹரிஹரன் பதவி உயர்வு பெற்று, திங்கட் கிழமை கள்ளழகர் கோவில் இணை ஆணையராக பொறுப்பேற்றார்.

பெரிய இலை கிராமத்தில் அடிப்படை வசதி கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

இராமநாதபுரம், மார்ச் 9- முதுகுளத்தூர் அருகே உள்ள பெரிய இலை கிராம மக்கள் குடிநீர், சாலை வசதி  உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உரு வாக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். கிராமத்தைச் சேர்ந்த சிபிஎம் முது குளத்தூர் தாலுகா குழு உறுப்பினர் சண்  முகையா கூறுகையில், கிராமத்தில் அடிப்  படை வசதிகள் இல்லாமல் பல முறை புகார்  அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. கிராமத்துக்குள் ஒரு தெருவிலி ருந்து மற்றொரு தெருவுக்கு செல்லும் பால மும் சேதமடைந்த நிலையில் உள்ளது. கிராம ஊராட்சி செயலாளரிடம் புகார்  அளித்தால் அலட்சியமாக பதில் அளிக் கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் உட னடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலி யுறுத்தினார்.

சாத்தான்குளம் அரசு கல்லூரிக்கு கூடுதல் பேருந்து இயக்க கோரி மனு

தூத்துக்குடி ,மார்ச் 9 தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழையிலிருந்து சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குச் செல்ல கூடுதல் பேருந்து வசதி செய்து தரக்கோரி, அக்கிராமத்தைச் சேர்ந்த மாணவிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்டம், பெரியதாழை கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இம்மாணவிகள் கல்லூரிக்குச் செல்ல முறையான பேருந்து வசதி இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.  இதனால் சரியான நேரத்திற்கு கல்லூரிக்குச் செல்ல இயலாத நிலை நிலவுகிறது. தற்போது திருச்செந்தூரிலிருந்து படுக்கப்பத்து வழியாகச் செல்லும் 62B என்ற தடம் எண் கொண்ட அரசுப் பேருந்தை, காலை 7:30 மணி அளவில் பெரியதாழை கிராமத்திற்குள் வந்து மாணவிகளை ஏற்றிச் செல்லுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல் விவசாயிகள் பிரச்சனைகளுக்கு ஆட்சியர் தீர்வு காண வி.ச வலியுறுத்தல்

தென்காசி, மார்ச் 9- தென்காசி மாவட்டத்தில் நெல், மக்காச்சோளம், வாழை உளுந்து பாசி என பல வகை நிலங்களில், பல வகை பயிர்கள், பயிரிடப்படுகின்றன. அதிலும் பிரதான மாக நெற்பயிர். இந்த மாவட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தென்காசி மாவட்ட விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுவதில் ஊழல் இருப்பதாக தகவல் வெளியாகின. இதை அடுத்து தென்காசி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமாவட்ட செயலாளர் அசோக்ராஜ் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் பல்வேறு கொள்முதல் நிலை யங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் வாங்கு கின்றனர். இவற்றில் சன்னரகம் ஒரு கிலோ நெல் ரூபாய் 25.45 பைசாவும், மோட்டரக நெல் ஒரு கிலோ ரூ.25 க்கும் வாங்கப்படுகிறது. மேலும் அரசாங்கத்தால் நெல் வாங்கப்பட்டு, கிலோவிற்கு தகுந்த மாதிரி விவசாயி கள் வங்கிக் கணக்கில் பணம் வரவும் வைக்கப்படுகிறது. ஆனால் பல்வேறு கொள்முதல் நிலையங்களில் அரசு அதி காரிகள் விவசாயிகளிடமிருந்து நெல் வாங்கும் போது ஒரு மூட்டைக்கு ரூபாய்40 வீதம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அவ்வாறு வாங்கும் போது 400 முதல் 500 மூட்டைகள் வைத்திருக்கக்கூடிய விவசாயிகளுக்கு அது பெரும் இழப்பீடாக அமைகின்றன. எனவே தென்காசி மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி இந்த பிரச்சனை க்கு தீர்வு காண வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

வீரவநல்லூர் அருகே முதியவருக்கு அரிவாள் வெட்டு- நெல்

மூட்டைகளையும் நாசமாக்கிய கும்பல் திருநெல்வேலி, மார்ச் 9- நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அடுத்த வீரவநல்லூர் அருகே உள்ள உதயமார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன் ( 75). விவசாயி. இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது அவரை வழிமறித்த கும்பல் ஒன்று, முருகனுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. பின்னர் அவர்கள் ஆற்றின் மற்றொரு கரையில் இருக்கும் முக்கூடல் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்திற்குள் தப்பிச் சென்றனர். அவ்வாறு செல்லும்போது அந்த பகுதியில் அறுவடை செய்து நெல்மணிகளை சேகரித்து வைத்திருந்த நெல் மூட்டைகளையும் அரிவாளால் வெட்டி நாசமாக்கினர். இதுகுறித்து சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுபோன்ற வன்முறை சம்பவங்களை போலீசார்இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என அப்பகுதி வலியுறுத்தினர், இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், இந்தவன்முறை சம்ப வத்தில் 3 சிறார்கள் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசா ரணை நடத்தி வருகி றோம். மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது சிறார்களை கைது செய்து நடத்திய விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்றனர், தீண்டாமையின் உச்சபட்ச மாக இந்த செயல் நடைபெற்றுள்ளதாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

நெல்லை-மங்களூர் இடையே நேரடி ரெயில் நாளை துவக்கம்

திருநெல்வேலி,மார்ச் 9- திருநெல்வேலி மங்களூர் இடையே புதிய வாரந்தர ரயில் மார்ச் 11 முதல் இயக்கப்படுகிறது. நெல்லையிலிருந்து நாகர்கோவில் டவுன், திருவனந்த புரம், கொல்லம் ஆலப்புழா எர்ணாகுளம் திருச்சூர் சோரனூர், கோழிக்கோடு காசர்கோடு கண்ணூர் மங்களூர் வழியாக குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் திருநெல்வேலி- ஜாம்நகர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது, இதேபோல் புதன்கிழமை அன்று திருநெல்வேலி தாதர் கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது, அதேபோல் வியாழக்கிழமை அன்று திருநெல்வேலி-காந்திதாம் வாராந்திர ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நெல்லையில் வாரத்தில் இரண்டு நாட்கள் காலியாக நிறுத்தப்பட்டு இருக்கும் திரு நெல்வேலி-புருலியா வாரந்திர எக்ஸ்பிரஸ் ரயிலை  (வண்டி எண்- 16708) புதிதாக திருநெல்வேலி-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் என பெயரிடப்பட்டு அந்த புதிய ரயிலின் சேவை  நாளை 11-ம் தேதி புதன்கிழமை முதல் இயக்கப்பட வுள்ளது, இந்த புதிய வாரந்திர ரயில் நெல்லையிலிருந்து புறப்பட்டு கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி,  பாலக்காடு, சோரனூர், கோழிக்கோடு, கண்ணூர்,காசர்கோடு வழியாக மங்களூருக்கு செல்கிறது. இந்த புதிய வாரந்திர ரயில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புதன்கிழமை மாலை 3.45 மணி அளவில் புறப்பட்டு மங்களூருக்கு மறுநாள் காலை 6:55 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கமாக  இதே ரயில் வண்டி எண்-16707 வியாழக்கிழமை மதியம் 1  மணிக்கு  மங்களூர் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருநெல்வேலிக்கு காலை 7.45 மணிக்கு வந்தடைகிறது

நாங்குநேரி இரட்டைக்கொலை சம்பவம் மாற்றுத்திறனாளி தொழிலாளியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி, மார்ச் 9- நாங்குநேரி அருகே உள்ள ‘பெரும்பத்து கிரா மத்தில் கடந்த வாரம் புகுந்த கும்பல் ஒன்று கண்ணில் பட்டவர்களையெல்லாம். சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் ஒடிசா தொ ழிலாளி திரிநாத் கட்டா மற்றும் பெரும்பத்து இந்திரா நகரை சேர்ந்த மாற்றுத் திறனாளி தொழிலாளியான ஜான் மார்க் (47) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் - பெரும்பத்து கிராமத்தை 5 சேர்ந்த நெல்சன் உள்பட 5 பேர் படு காயம் அடைந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் நாங்கு நேரி போலீசார் இதுவரை 9 பேரை கைது செய்து சிறை யில் அடைத்தனர். இந்த இரட்டை கொலையை கண்டித்து கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் தொடர்  போராட்டத்தில் ஈடு பட்டு வந்தனர், கொலை குற்றத்தில் ஈடு பட்ட வர்களுக்கு விசாரணை முடியும் வரை  ஜாமீன் வழங்காமல் தண்டனை பெற்றுத்தர வேண்டும் பாதிக்கப்பட்ட வர்களுக்கும், சாட்சி களுக்கும் காவல்துறை  பாதுகாப்பு வேண்டும், ஊர் அருகில் உள்ள மதுக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும். விவசாய நிலங்களில் எதிர் தரப்பினர் ஆடு மாடுகளை விட்டுசேதம் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை  வைத்து உடலை வாங்க மறுத்து போராட்டம் நடை பெற்றது.  இந்நிலையில் அவர்களிடம் போலீசார், அதிகாரிகள் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், சுமூக உடன்பாடு எட்டப்பட்டதால் ஒரு வாரமாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனை பிணவறை யில் வைக்கப் பட்டிருந்த கொலையுண்ட ஜான் மார்க்கின் உடலை அவரது உறவினர்கள் திங்கட்கிழ மையன்று பெற்றுக் கொண்டனர்.  பலத்த போலீஸ் பாது காப்புக்கு மத்தியில் அவர் உடல் ஒப்படைக்கப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.