முந்தய பக்கம்

கரை ஒதுங்கிய 13.7 அடி நீளமுள்ள திமிங்கிலத்தின் உடல்

29 Mar 2026, 3:34 pm
கரை ஒதுங்கிய 13.7 அடி நீளமுள்ள திமிங்கிலத்தின் உடல்
<p><strong>கரை ஒதுங்கிய 13.7 அடி நீளமுள்ள திமிங்கிலத்தின் உடல்</strong></p> <p>விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரம் மாவட்டம் ஆலம்பரை கோட்டைக்கு வடக்கே உள்ள தாழங்காடு கடற்கரையில், சுமார் 13.7 அடி (4.2 மீட்டர்) நீளம் கொண்ட &lsquo;குறுகிய துடுப்பு பைலட் திமிங்கிலம்&rsquo; ஒன்றின் உடல் சனிக்கிழமை கரை ஒதுங்கியது. கால்நடை மருத்துவப் பரிசோதனையில், திமிங்கிலத்தின் உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதன் இறப்பிற்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய முடிய வில்லை. இருப்பினும், உடலின் வெளிப்புறத்தில் காயங்கள் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் உறுதிப் படுத்தியுள்ளனர். வழக்கமான நடை முறைகளின்படி, திமிங்கிலத்தின் உடல் கடற்கரையிலேயே குழி தோண்டி புதைக்கப்பட்டது. கிருமித் &nbsp;தொற்று பரவாமல் இருக்க ரசா யனங்கள் தெளிக்கப்பட்டு அந்த இடம் தூய்மைப்படுத்தப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram