வணிகவரித்துறை உயர் அதிகாரியின் உடல் தானம்
20 Feb 2026, 2:39 pm
<p><strong>வணிகவரித்துறை உயர் அதிகாரியின் உடல் தானம்</strong> </p>
<p>சிவகங்கை,பிப்.20- சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாரதி புத்தகா லயம் கிளை பொறுப்பாளரும் வணிகவரித்துறை ஓய்வு பெற்ற அதிகாரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தோழருமான ஜீவானந்தம் (வயது 72) உடல் நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிவகங்கை அரசு மருத்துவகல்லூரிக்கு அவரது உடல் தானம் செய்யும் நிகழ்வு பிப்ரவரி 19 நடைபெற்றது . சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜடா முனி மருத்துவமனை முதல்வர் டாக்டர் விசாலாட்சி ஆகியோரிடம் ஜீவானந்தம் குடும்பத்தினர் உடலை தானம் செய்து எழுதி கொடுத்தனர். இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயலா ளர் ஆரோக்கியசாமி, அறிவொளி இயக்கத்தின் பொ றுப்பாளர் மாணிக்கவல்லி, மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரோகிணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். </p>
