போடி – மதுரை தினசரி ரயில் சேவை கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்
12 Jun 2026, 10:07 pm

போடி – மதுரை தினசரி ரயில் சேவை கோரி மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜூன். 12 - போடி – மதுரை இடையே தினசரி ரயில் சேவையை இயக்க வேண்டும், தேனி ரயில் நிலையத்தில் பூட்டப்பட்டுள்ள கட்டணக் கழிப்பறைகளை திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி திண்டுக்கல் – குமுளி அகல ரயில் பாதை திட்டப் போராட்டக் குழு சார்பில் வெள்ளியன்று மதுரை கோட்ட இரயில்வே மேலாளர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர், மதுரை கோட்ட இரயில்வே மேலாளரிடம் கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. போராட்டக் குழுவினர் வெளி யிட்டுள்ள கோரிக்கைகளில், போடி யில் இருந்து காலை 7 மணிக்கு மது ரைக்கும், மதுரையிலிருந்து மாலை 7 மணிக்கு போடிக்கும் தினசரி ரயில் சேவையை இயக்க வேண்டும் என்று வலி யுறுத்தப்பட்டுள்ளது. இந்த சேவை, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், வணிகர்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட அவசரத் தேவைகளுக்காக மதுரைக்கு தினந்தோ றும் சென்று வருபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரி விக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி ரயில் நிலையத்தில் உள்ள கட்டணக் கழிப்பறைகள் நீண்ட நாட்க ளாக பூட்டப்பட்டுள்ளதால் பயணிகளும், அவர்களுடன் வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அவற்றை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர இரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.