அம்பத்தூர் மக்களின் பொழுதுபோக்கிற்கு திறக்கப்பட்ட தாங்கல் ஏரியில் படகுசவாரி
6 Mar 2026, 3:17 pm
<p><strong>அம்பத்தூர் மக்களின் பொழுதுபோக்கிற்கு திறக்கப்பட்ட தாங்கல் ஏரியில் படகுசவாரி</strong></p>
<p>சென்னை,மார்ச் 6- அம்பத்தூர் தாங்கல் ஏரி பூங்கா வில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் அமை க்கப்பட்டு முதலமைச்சரால் பயன் பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்ட படகு குழாம் மக்களுக்கு மிகச்சிறந்த பொழு துப்போக்குத் தளமாக அமைந்துள் ளது. மதனங்குப்பம் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த தாங்கல் ஏரியா னது 64,749 சதுர மீட்டர் பரப்பளவில் 15 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி 21,68,68,248 லிட்டர் நீர் சேமிப்பு கொள்ளளவு கொண்டது. இதில் 1168 மீ நீளத்தில் சுற்றுச்சுவர், 3582 சதுர மீட்டர் நடைபாதை, 8853 சதுர மீட்டர் பரப்பள வில் பசுமைப் பகுதி, 4376 சதுர அடி பரப்பளவில் திறந்தவெளி மற்றும் விளையாட்டுப் பகுதி, 490 சதுர மீட்டர் பரப்பளவில் பெண்கள் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்வதற்கான பகுதி, வாசிப்புப் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏரியில் படகு குழா மில் 2 படகுத் துறைகள், 4 மிதிவண்டி படகுகள், 2 மீட்புப் படகுகள், 40 உயிர் காப்புச் சட்டைகள், 28 பூங்கா மேசைகள், ஆண்கள் மற்றும் பெண்க ளுக்கான 10 கழிப்பறைகள், 7 எண்ணிக் கையில் தண்ணீர் உள்ளேறும் குழாய், 2 எண்ணிக்கையில் தண்ணீர் வெளி யேறும் குழாய், 12 மீட்டர் உயரம் கொண்ட 1 உயர்கோபுர மின்விளக்கு, 16 மீட்டர் உயரம் கொண்ட 1 உயர் கோபுர மின்விளக்கு, 37 எண்ணிக்கை யில் தெருமின் விளக்குகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் அமைக்கப்பட்டுள்ள படகு குழாம் பொதுமக்களுக்கு மிகச் சிறந்த பொழுதுப்போக்கு தளமாக அமைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.</p>
