யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு
11 Apr 2026, 5:30 am

யமுனை நதியில் படகு கவிழ்ந்து விபத்து 6 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள யமுனை ஆற்றில் 30 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு பெருந்தூண் பாலம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

வெளியானது மாலை 6 மணி நிலவரப்படி 6 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திரபிரகாஷ் சிங் கூறுகையில், "இந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. விபத்துக்குள்ளான குழுவினர் பஞ்சாப்பிலிருந்து யமுனை நதியைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள்" என அவர் கூறினார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.