முந்தய பக்கம்

எண்ணெய் நக்கும் நீள நாக்குகளில் பிசிபிசுக்கும் குருதி!

10 Jan 2026, 12:25 pm
எண்ணெய் நக்கும் நீள நாக்குகளில் பிசிபிசுக்கும் குருதி!
<p><strong>எண்ணெய் நக்கும் நீள நாக்குகளில் பிசிபிசுக்கும் குருதி!</strong></p> <p>நடைப்பயிற்சி &nbsp;போகும் போதாவது &nbsp;தலை &ldquo;சும்மா&rdquo; இருக்கிறதா! &nbsp; வெனிசுலா.... வெண்கலக்கடையில் &nbsp;புகுந்து &nbsp;கடைக்காரனை &nbsp;தூக்கிச்செல்கிறது நேரலையில் யானை... &nbsp;எண்ணெய் நக்கும் &nbsp;நீள நாக்குகளில் &nbsp;பிசுபிசுக்கும் குருதி. பிணமாய்க் கிடக்கிறது &nbsp;இறையாண்மை! &nbsp;சிவப்பாகிறது &nbsp;அருகில் இருக்கும் &nbsp;நீலக்கடல்! &nbsp;சில முதுகெலும்புகள் &nbsp;பேசுகின்றன... &nbsp;நடுநிலைகள் &nbsp;பட்டும்படாமல் நக்குகின்றன! &nbsp; &ldquo;இயற்றலும் ஈட்டலும் &nbsp;காத்தலும் காத்த &nbsp;வகுத்தலும் வல்ல தரசு&rdquo; &nbsp;என்று ஏன் &nbsp;வகுப்பெடுத்தான் வள்ளுவன்! &nbsp;வல்லது அரசு சரி! &nbsp;வல்லது எல்லாம் நல்லதா? &nbsp;வல்லரசு &nbsp;மெல்லரசு &nbsp;நல்லரசு எவை என்று &nbsp;வரைபடத்தில் தேடுகிறேன்! &nbsp;எல்லைக் கோடுகளில் எரியும் தீப்பந்தங்கள்! &nbsp;செய்தி தொலைக்காட்சிகளில் &nbsp;&ldquo;கோட்-சூட்&rdquo; போட்டவர்கள் &nbsp;குரைக்கிறார்கள்! &nbsp;இப்படியாகப் &nbsp;பிறந்திருக்கிறது &nbsp;புத்தாண்டு!</p>
Share
FacebookXWhatsAppTelegram