முந்தய பக்கம்

கலாம் பேரன்கள் அறிமுகம் செய்த ரத்ததான செயலி

30 Nov 2025, 4:29 pm
கலாம் பேரன்கள் அறிமுகம் செய்த ரத்ததான செயலி
<p><strong>கலாம் பேரன்கள் அறிமுகம் செய்த ரத்ததான செயலி</strong></p> <p>கோவை, நவ.30- ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் பேரன் கள் அறிமுகம் செய்த ரத்ததான செயலி யில், எந்த நேரத்திலும் ரத்தம் கிடைக் கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசு தலை வர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவாக அவரது பேரன்கள் ஷேக் &nbsp;சலீம் மற்றும் ஷேக் தாவூத் நடத்தி வரும், &nbsp;ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இன்டர்நேச னல் பவுண்டேசன் சார்பில், புதிய &nbsp;ரத்ததான செயலி ஒன்றை கோவையில் &nbsp;அறிமுகம் செய்தனர். லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சனியன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட நீதிபதி முகமது ஜியாபூதீன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, &lsquo;நண்பன் ப்ரோ&rsquo; என பெயரிடப்பட்ட ரத்ததான செயலி யை அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த &nbsp;செயலி மூலம் ரத்தம் தானம் செய்ய &nbsp;விரும்புபவர்கள், ரத்தம் வைத்திருக் கும் நபர்கள், ரத்த வங்கிகள், மற்றும் மருத்துவமனைகளை ஒரே தளத்தில் இணைத்து, அவசரமாக ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு உட னடியாக தகவலளித்து ரத்தம் எளிதா கக் கிடைக்கச் செய்யும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து &ldquo;கோவையின் பெருமை&rdquo; என்ற தலைப்பில் மருத்துவம், கல்வி, பொது சேவை, பொறியியல் உள்ளிட்ட 10 துறைகளில் சிறந்து விளங்கும் 10 &nbsp;வல்லுநர்களுக்கு விருதுகள் வழங் கப்பட்டன. இதனிடையே பள்ளி, கல் லூரி மாணவர்கள் பங்கேற்ற கலை &nbsp;மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட் டன. இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டா ளர்கள் உட்பட திரளானோர் பங்கேற்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram