ஆசிய பாரா டேக்வாண்டோவில் தங்கம் வென்ற பிளஸ்ஸிங் சஜுவுக்கு ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து
5 Jun 2026, 8:25 pm

ஆசிய பாரா டேக்வாண்டோவில் தங்கம் வென்ற பிளஸ்ஸிங் சஜுவுக்கு ஆர்.செல்லசுவாமி எம்எல்ஏ வாழ்த்து

நாகர்கோவில், ஜூன் 5 - கன்னியாகுமரி மாவட் டம் சரல்விளையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிளஸ்ஸிங் சஜு (26) அண்மையில் மங்கோலியா நாட்டில் நடைபெற்ற ஆசிய டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்றார்.

அவ ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பத்மநாப புரம் தொகுதி சட்டமன்ற உறு ப்பினர் ஆர்.செல்லசுவாமி வாழ்த்து தெரிவித்தார்.

பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத சஜு பி.காம் பட்டதாரியா வார். பன்முக திறன்கள் கொண்ட இவர் கடந்த சில ஆண்டுகளாக டேக் வாண்டோ போட்டிகளில் பங்கேற்று தேசிய, உலக சாதனைகளை படைத்துள் ளார். சஜுவின் தந்தை ஆர்.எலியாஸ் கூலிவேலை செய்பவர். தாயார் திரேஸ் மேரி இவருக்கு பாதுகாவல ராக மட்டுமல்ல கைகளாக வும் உடனிருந்து செயல் பட்டு வருகிறார்.

வேறு குடும்ப வருவாய் ஏதும் இல்லாத நிலையில் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கேற்க உதவிகளை எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார். இந்நிலையில், மங்கோ லியா நாட்டின் உலான்பா தரில் நடந்த 11ஆவது ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டியில், 63 கிலோவுக்கு உட்பட்ட கே.41 போட்டியில் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் சஜு.

மங்கோலியாவுக்கு, இவருடன் ஒரு பாதுகாவ லரும் செல்ல நான்கரை லட்சம் ரூபாய் தனது சொந்த நிதியில் இருந்து நாடாளு மன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் வழங்கி ஊக்குவித் துள்ளார். தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதி வரும் சஜு விளையாட்டுக் கான ஒதுக்கீட்டில் அர சுப்பணி கிடைக்க உதவு மாறு சட்டமன்ற உறுப்பினர் ஆர்.செல்லசுவாமியிடம் கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று வேலை வாய்ப்புக்கு உதவுவதாக செல்லசுவாமி உறுதி அளித்தார். முன்னதாக, நாடாளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் ஆகியோரை சந்தித்து பிளஸ்ஸிங் சஜு வாழ்த்து பெற்றார். டேக்வாண்டோ என்பது தற்காப்புக் கலை சார்ந்த ஒரு விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.