முந்தய பக்கம்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

11 Oct 2026, 9:17 pm
பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

திண்டுக்கல்லில் வாலிபர்கள், மாணவர்கள் கைது

திண்டுக்கல், அக்.11-தமிழகத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு எதிராக, திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கருப்புக் கொடி ஏந்திப் போராட்டத் தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந் திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட் டோர் கைது செய்யப்பட்டனர்.தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி தில்லியில்நடைபெற்ற போராட்டத்தின் போது, மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் இடதுசாரி அமைப்புகளின் தலைவர் கள் மீது தாக்குதல் நடத்திய மோடி அரசைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது.

இதில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட் டத் தலைவர் ரஞ்சித் சேகுவேரா, மாவட்டச் செயலாளர் முகேஷ், மாவட்டப் பொருளாளர் பிரேம்குமார், இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் தீபக் ராஜ், மாவட்டச்செயலாளர் நிருபன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram