முந்தய பக்கம்

மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

14 Nov 2025, 1:26 pm
மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்
<p><strong>மோடிக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்&nbsp;முற்போக்கு இயக்கங்கள் அறிவிப்பு</strong></p> <p>முற்போக்கு இயக்கங்கள் அறிவிப்பு கோவை, நவ.14- பீகார் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் தின்போது தமிழகம் மற்றும் தமிழர்கள் குறித்து அவதூறாகப் பேசிய பிரதமர் மோடி யின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முற் போக்கு இயக்கத்தினர் கோவையில் கருப் புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர். காந்திபுரம் தபெதிக அலுவலகத்தில் அனைத்து முற்போக்கு இயக்கங்களின் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின்னர், தபெதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் கூறு கையில், &ldquo;தமிழகத்தில் வட மாநிலத் தொழி லாளர்கள் பாதுகாப்பாக இருக்கும் சூழ லில், தமிழர்கள் மீது வன்மத்தை ஏற்ப டுத்தும் வகையில் பிரதமர் மோடி பேசியுள் ளார். ஒடிசா தேர்தலின்போதும் அமித் ஷா &nbsp;தமிழர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு களை வைத்தார். அவதூறாகப் பேசிய பிர தமர் மோடியை தமிழகத்திற்குள் அனுமதிக்க முடியாது&rdquo;. விமான நிலைய வாயிலில் பிர தமருக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரி வித்து, அவரைத் தமிழகத்தை விட்டுத் திரும் பப்போக வலியுறுத்தி முழக்கங்களை எழுப்ப வுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நவம்பர் 19ஆம் தேதி கோவை கொடி சியா வளாகத்தில் நடைபெறும் தென் னிந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநாட் டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram