முந்தய பக்கம்

அறுவடைக்கு தயாராகும் கருப்பு கேரட்

8 Feb 2026, 3:55 pm
அறுவடைக்கு தயாராகும் கருப்பு கேரட்
<p><strong>அறுவடைக்கு தயாராகும் கருப்பு கேரட்</strong></p> <p>உதகை, பிப்.8- தில்லியிலிருந்து விதை கள் பெறப்பட்டு, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பயிரி டப்பட்ட கருப்பு கேரட், அறுவ டைக்கு தயாராகி வருகி றது. உத்தர பிரதேசம், ஹரி யானா, பீகார், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கருப்பு கேரட் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனை மலை மாவட்டமான நீலகிரியில் சோதனை முறை யில், விளைவிக்க தோட்டக்கலைத்துறை சார்பில் நடவ டிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, தில்லியில் இருந்து விதை கள் பெறப்பட்டு, குன்னூரில் முதல்முறையாக விதைக்கப் பட்டது. குன்னூர் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான சிம்ஸ் பூங்காவில், சோதனை அடிப்படையில் விளை விக்கும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. நார்சத்து அதிக மாக உள்ளதால், இவ்வகை கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின், பொட்டா சியம், வைட்டமின் கே, ஆக்ஸிஜனேற்றிகள் அதிகமாக உள்ளதாக தோட்டக்கலைத் துறையினர் தெரிவித்துள்ளனர். இன்னும் சில வாரங்களில் இந்த கேரட் அறுவடைக்கு தயா ராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
Share
FacebookXWhatsAppTelegram