முந்தய பக்கம்

விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

15 Nov 2025, 4:09 pm
விழுந்து நொறுங்கிய பயிற்சி  விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு
<p><strong>விழுந்து நொறுங்கிய பயிற்சி &nbsp;விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு</strong></p> <p>திருப்போரூர், நவ.15- சென்னையை அடுத்த திருப்போரூரில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவத்தில் விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் இந்திய விமானப்படை தளத்திலிருந்து வெள்ளிக்கிழமை பகல் 1.30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி.7 என்ற பயிற்சி விமானம் புறப்பட்டது. விமானி சுபம் என்பவர் இயக்கிய இந்த விமானம், திருப்போரூர் பகுதியில் பறந்த போது இயந்திர கோளாறு ஏற்பட்டது. விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயன்ற விமானியின் முயற்சி தோல்வியடைந்ததால், கட்டுப்பாட்டை இழந்த விமானம் திருப்போரூர் நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு தொழிற்சாலையின் பின்பகுதியில் சேற்றில் விழுந்தது. விமானம் கீழே விழப் போவதை அறிந்த விமானி பாராசூட்டில் குதித்து தப்பினார். விமானத்தின் சில பாகங்கள் சிதறியதில், தொழிற்சாலையின் ஒரு பகுதி சேதமடைந்தது. விமானி பரங்கிமலை ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். விசாரணைக்கு பிறகு விபத்திற்கான காரணம் தெரியவரும்.</p>
Share
FacebookXWhatsAppTelegram