தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பா.ஜ.க-வின் 'சங்கல்ப பத்ரா': சோனார் பங்களாவா? 'சொப்பன' பங்களாவா?

11 Apr 2026, 5:30 am
பா.ஜ.க-வின் 'சங்கல்ப பத்ரா': சோனார் பங்களாவா? 'சொப்பன' பங்களாவா?

பா.ஜ.க-வின் 'சங்கல்ப பத்ரா': சோனார் பங்களாவா? 'சொப்பன' பங்களாவா?

மேற்கு வங்கத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் வெளியிட்டுள்ள 'சங்கல்ப பத்ரா' (தேர்தல் அறிக்கை), அரசியல் விமர்சகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 ஆண்டுகால மம்தா ஆட்சியின் 'கனவுத் தொல்லை' என்று வர்ணிக்கும் பா.ஜ.க, தான் முன்வைத்துள்ள திட்டங்கள் மூலம் வங்காளத்தைத் 'தங்க வங்காளமாக' (சோனார் பங்களா) மாற்றப்போவதாக கதை அளந்துள்ளது. ஆனால், அந்த அறிக்கையைச் சற்று ஆழமாகத் தோண்டிப் பார்த்தால் தெரிவது தங்கம் அல்ல, துருப்பிடித்த பழைய அரசியல் உத்திகளே!

ஊருக்கு ஒரு நீதி: பா.ஜ.க-வுக்கு ஒரு நீதியா? தமிழகத்தில் திமுக இலவச திட்டங்களை அறிவித்தால், உடனே தில்லியிலிருந்து 'பொருளாதார மேதைகள்' கிளம்பி விடுவார்கள். "இலவசங்களால் மாநில திவாலாகிவிடும், இது நாட்டின் பொருளாதாரத்திற்கே பேராபத்து" என்று கூச்சல் போடும் இதே பா.ஜ.க, இப்போது மேற்கு வங்கத்தில் மட்டும் 'வள்ளல்' வேடம் பூண்டுள்ளது.

பெண்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய், மாநில அரசு ஊழியர்களுக்கு 45 நாட்களில் ஏழாவது ஊதியக் குழு எனப் பா.ஜ.க அள்ளி வீசியுள்ளது. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் 'இலவசக் கலாச்சாரம்' என்று ஏளனம் பேசும் பா.ஜ.க, இப்போது வாக்குக்காக இலவச திட்டங்களை வாரி வழங்குவதாகக் கூறுவது அவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தியுள்ளது. "தமிழகத்திற்கு ஒரு நீதி, பா.ஜ.க-வுக்கு ஒரு நீதியா?" என்று மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர்.

91 லட்சம் பேர் நீக்கம்: இன்னும் முடியாத ஊடுருவல் அரசியல்! பா.ஜ.க-வின் நிரந்தரப் 'புச்சாண்டியான' ஊடுருவல் விவகாரம் மீண்டும் கையில் எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற பெயரில், சுமார் 91 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. இத்தனை பேரை நீக்கிய பிறகும், இன்னும் "கண்டறி, நீக்கு, நாடுகடத்து" என்று முழங்குவது நகைப்புக்குரியது. உண்மையில் இது ஊடுருவல்காரர்களுக்கான எச்சரிக்கை அல்ல; மாறாக, சிறுபான்மையினரை அச்சுறுத்தி வாக்குகளைப் பிரிக்கும் ஒரு மலிவான அரசியல் உத்தியாகும்.

யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்கப் போகிறார்கள்? "காடுகளுடன் கடத்தப்படுவதைத் தடுப்போம்" என்று அமித் ஷா வீராவேசம் பேசியிருக்கிறார். ஆனால் வரலாறு சொல்வது வேறு. கடந்த காலங்களில் எல்லை வழியாக வங்கதேசத்திற்குக் கால்நடைகளைக் கடத்திய வழக்குகளில் பா.ஜ.க பிரமுகர்களே சிக்கியது அம்பலமானது. "வேலியே பயிரை மேய்ந்த கதையாக", தங்களுக்குள் இருக்கும் கடத்தல் புள்ளிகளைக் கட்டுப்படுத்தாமல், யாரிடமிருந்து யாரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

முடக்கப்பட்ட 100 நாள் வேலைத் திட்டம் இடதுசாரிகளின் கடும் நிர்ப்பந்தத்தால் கொண்டுவரப்பட்ட '100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு' ஒன்றிய பா.ஜ.க அரசு போதிய நிதி ஒதுக்காமல் முடக்கி வருகிறது. கிராமப்புற மக்களின் வயிற்றிலடிக்கும் பா.ஜ.க, இப்போது தேர்தல் நேரத்தில் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாகக் கூறுவது வேடிக்கையானது. அமித் ஷா கூறும் 'சோனார் பங்களா' என்பது வெறும் தேர்தல் நேரத்துத் 'திருவிளையாடல்' என்பதை வங்காள மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர். மொத்தத்தில், இந்தத் தேர்தல் அறிக்கை 'தங்கப் பங்களா'வுக்கான வரைபடம் அல்ல, மக்களை ஏமாற்றப் போடப்பட்ட 'கனவு' கோட்டை!

அ. விஜயகுமார்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.