தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

10 Apr 2026, 5:30 am
அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை

பழனி/கந்தர்வகோட்டை, ஏப். 9 - தமிழகத்தில் அதிமுக என்ற முக மூடியை அணிந்து கொண்டு, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. பாரதிய ஜனதாவின் அமைதியைப் பாதுகாத்திடவும், பாஜகவின் நிதி திட்டங்களை முறியடிக்கவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம். சின்னதுரை ஆகியோரை ஆதரித்து அவர் எழுச்சிமிகு பிரச்சாரம் மேற்கொண்டார். தமிழகத்தின் அமைதியைக் குலைக்க பாஜகவின் திரைமறைவுத் திட்டம்.

பழனி ஆயக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பெ.சண்முகம், அதிமுக - பாஜக கூட்டணியின் ஆபத்துக்களை விளக்கினார். தமிழகத்தில் நேரடியாகக் காலூன்ற முடியாத பாஜக, அதிமுக மற்றும் பாமக போன்ற கட்சிகளின் துணையுடன் எப்படியாவது வெற்றி பெற்று, அதிமுக பெயரில் தமிழகத்தை ஆளத் துடிக்கிறது. பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் நாள்தோறும் மதக்கலவரங்களும் பெண்கள் மீதான வன்கொடுமைகளும் வேடிக்கையாகி விட்டன.

உத்தரப்பிரதேசத்தில் பெண்கள் பாலியல் ரீதியான வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படாத நாளே கிடையாது என்ற அவலநிலை உள்ளது. தமிழகம் அத்தகைய கலவர பூமியாக மாற வேண்டுமா அல்லது அமைதிப் பூங்காவாகத் தொடர வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டினார்.

நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை. நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான போக்கைக் கடுமையாகச் சாடிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய மோடி அரசு, சமஸ்கிருதத்திற்கு 3,500 கோடி ரூபாய்க்கு மேல் வாரி வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வகையில் பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. இதெல்லாம் தெரிந்துதான் தமிழகத்தின் மொழி மற்றும் வளர்ச்சிக்குத் துரோகம் செய்த பாஜகவின் பெயரை உச்சரிக்கவே எடப்பாடி பழனிசாமி அஞ்சுகிறார். பாஜக என்று சொன்னால் தமிழகத்தில் வாக்கு கிடைக்காது என்பது அவருக்குத் தெரிந்தே இருக்கிறது. இதனால், மோடியின் பெயரைத் தவிர்க்கும் எடப்பாடி பழனிசாமி, மறுபுறத்தில் பாஜகவோடு கைகோர்த்து வாக்கு கேட்டு வருகிறார் என அவர் விளக்கினார்.

திமுக அரசின் சாதனைகளும் புதிய வாக்குறுதிகளும். கந்தர்வகோட்டை தொகுதியில் பேசிய பெ.சண்முகம், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் போன்றவை கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளன.

தற்போது வெளியாகியுள்ள திமுக தேர்தல் அறிக்கையில், குடும்பங்களுக்குத் தேவையான மின் சாதனங்களை வாங்க 3,000 ரூபாய் கூப்பன், மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்வு, மாணவர்களுக்கு மடிக்கணினி, 29 லட்சம் விவசாயிகளுக்குப் புதிய இலவச மின்மோட்டார்கள் எனப் பல்வேறு சிறப்பான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

நடைமுறைக்குச் சாத்தியமற்ற பொய் வாக்குறுதிகள். விஜயபாஸ்கர் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் வழங்குவது போன்ற நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளை தவெக தலைவர் விஜய் அளித்து வருவதாகத் தெரிவித்தார். தென் மாநிலங்களின் மொத்த வருவாயைக் கொண்டு வந்தாலும் இதனை நிறைவேற்ற முடியாது.

ஆட்சிக்கு வரப்போவதில்லை என்ற எண்ணத்தில் இத்தகைய பொய்யான வாக்குறுதிகளை அவர்கள் அள்ளி வீசுகிறார்கள். மக்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காகவே இத்தகைய கட்சிகள் களமிறக்கப்பட்டுள்ளன. திமுக தேர்தல் அறிக்கை என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஆவணங்களைக் கொண்டது. ஆனால் மாற்றுத் தரப்பினரின் வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றும் நிராகரிக்கக் கொண்டவை என அவர் விமர்சித்தார்.

உழைப்பாளி மக்களின் குரலாக இடதுசாரிகள். தமிழகச் சட்டமன்றத்தில் இடதுசாரிகளின் பலம் அதிகரிப்பது உழைக்கும் மக்களின் உள்ளக் குமுறல்களையும், கோரிக்கைகளையும் உரிய இடத்தில் எடுத்துச் சொல்ல உதவும் எனத் தெரிவித்தார். பழனி மற்றும் கந்தர்வகோட்டை தொகுதியிலும் சிபிஎம் வேட்பாளர்களுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

கந்தர்வகோட்டை தொகுதியில் வியாழனன்று காலை நடைபெற்ற பரப்புரையில் சிபிஎம் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் கே. சாமுவேல்ராஜ், கே. அர்ஜுனன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஐ.வி. நாகராஜன், ஏ.வி. சிவகார்வேலன், மாவட்டச் செயலாளர் எஸ். சங்கர், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ. ராமையன், ஒன்றியச் செயலாளர்கள் பழனி, நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர். மேலும் திமுக ஒன்றியச் செயலாளர் தமிழ் ராஜா, காங்கிரஸ் வட்டாரத் தலைவர் மாயக்கண்ணு, தேமுதிக ஒன்றியச் செயலாளர் சிவக்குமார், விசிக மாவட்டச் செயலாளர் செந்தமிழ் வளவன், தமிழர் தேசியம் கட்சி ஒன்றியச் செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் திரளாகப் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.