தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

11 Dec 2025, 5:47 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

வாக்கு திருடி வெற்றிபெற்ற பாஜக: காங்கிரஸ் தேசிய செயலாளர் கோபிநாத் பேட்டி

திருப்பூர், டிச.11- திருப்பூர் பார்க் சாலையில் உள்ள ஐ.என்.டியு.சி. அலுவல கத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் தேசிய  செயலாளர் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தா லும், கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப் போம். நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்திப் பேசுகி றார். இது கண்டிக்கத்தக்கது. வாக்குப்பதிவு எந்திரங்கள்,  வாக்குத் திருட்டினை பயன்படுத்தித்தான் பாஜக வெற்றி பெற் றுள்ளது. வாக்காளர்கள் பலர் இன்னும் தங்களது படி வங்களை வழங்கவில்லை. எனவே திருத்தப்பணிக்கான காலத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்  என்றார்.

இறுதிகட்டத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள்

திருப்பூர், டிசம்பர் 12 - திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  தொகுதிகளிலும் சிறப்பு வாக்காளர் திருத்தப்  பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,536  வாக்குச்சாவடிகள் உள்ளன. ஆண் வாக்கா ளர்கள் 11,96,499, பெண் வாக்காளர்கள் 12,48,072, மூன்றாம் பாலினத்தவர் 358 என  மொத்தம் 24,44,929 உள்ளனர். இந்நிலை யில்  நடைபெற்ற சிறப்பு வாக்காளர் பட்டியல்  திருத்தப் பணிகள் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தன. தொழில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாவட்டத்தின் எட்டு சட்டமன்ற  தொகுதிகளிலும் இப்பணிகள் கடந்த சில  நாட்களாக தீவிரமாக நடைபெற்று தற்போது  நிறைவு பெற்றுள்ளன. கடந்த 4 ஆம் தேதி  இப்பணிகள் முடிவடைய இருந்த நிலையில்,  கூடுதல் அவகாசம் வழங்கப்பட வேண்டு மென்ற கோரிக்கையை ஏற்று, கால அவகா சம் நீட்டிக்கப்பட்டது. அதன்படி, டிச.11  ஆம் தேதி இத்திருத்தம் பணி இறுதிப்படுத்தப் பட்டது. தற்போது மீண்டும் மூன்று நாட்க ளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை நடைபெற்ற பணிகள் குறித்து  தேர்தல் பிரிவு அலுவலர் கூறுகையில், ஒரு  வாக்காளரும் விடுபடக் கூடாது எனும் நோக்கில் 2,536 வாக்குச்சாவடி நிலைய அலு வலர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்கள் பயன்பாட்டுப் படிவங்களைப் பெறுதல் மற்றும் பதிவேற்றம் செய்தல் உள்ளிட்ட பணி களில் ஈடுபட்டனர் என கூறினார்.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால்  தெரிவிக்கையில், ஒரு வாக்காளரும் விடப்படக்கூடாது என்பதே இத்திருத்தப் பணியின் நோக்கம் என கூறுகின்றனர். ஆனால், இவ்வளவு குறுகிய காலத்தில் இது நிறைவடைந்துள்ளது. எனவே ஆயிரக்கணக்கானோர் பட்டியலில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இப்போதும் கூட “பலருக்கு இந்த  எஸ்ஐஆர் படிவங்கள் போய்ச்சேராமல் உள்ளது.  திருப்பூர் போன்ற அதிக புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ள மாவட்டத்தில் இன்னும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். டிசம்பர் 19 அன்று வெளியாகவிருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் தான் உண்மையான விபரமும், பாதிப்பும் தெரிய வரும் என்றார். வாக்காளர் பட்டியலின் திருத்தப்பட்ட  வரைவு டிசம்பர் 19 ஆம் தேதி வெளியி டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலமானார் ஆர்.பெரிய காளியப்பன்

திருப்பூர், டிச. 11 – திருப்பூர் ஆண்டிபாளையம் பகுதி சின்னியகவுண்டன் புதூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முன்னோடி  உறுப்பினர் ஆர்.பெரிய காளியப்பன் (வயது 93) உடல் நலக்  குறைவால் புதன்கிழமை இரவு 9 மணியளவில் காலமா னார். ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து  பின்னர் கட்சி பிரிந்தபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யில் இணைந்து கடைசி வரை உறுதியுடன் இருந்தார். தொடக்க காலத்தில் பனியன் கம்பெனியில் தொழிலாளி யாக வேலை செய்தவர். ஆண்டிபாளையம் ஊராட்சியாக இருந்தபோது ஊராட்சி வார்டு உறுப்பினராக செயல்பட்டி ருக்கிறார். வயது மூப்பின் காரணமாக உடல் நலம் பாதிக் கப்படும் வரை ஆர்வத்துடன் கட்சி இயக்கங்களில் ஈடுபட்டு வந்தார். இவரது மறைவுச் செய்தி அறிந்து சிஐடியு மாவட்டத்  துணைத் தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்சியின் தெற்கு  ஒன்றியச் செயலாளர் கே.கணேசன் உள்ளிட்ட கட்சி அணியி னர் அவரது வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தி அவரது  குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.