தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை தென்காசி நகராட்சிக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் புகார்

8 Mar 2026, 3:42 pm
பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை  தென்காசி நகராட்சிக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் புகார்
<p><strong>பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை &nbsp;தென்காசி நகராட்சிக் கூட்டத்தில் பாஜக பெண் கவுன்சிலர் புகார்</strong></p> <p>தென்காசி, மார்ச் 8 - &nbsp;தென்காசி நகராட்சிக் கூட்டம் சனிக்கிழமை நகராட்சித் தலைவர் ஆர்.சாதிர் &nbsp;தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் &nbsp;தென்காசி நகராட்சி பகுதியின் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் குடிநீர் தொடர் பான விவாதங்கள் நடைபெற்றது. அப்போது பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 23ஆவது வார்டு நகரமன்ற உறுப்பி னர் சுனிதா பேசுகையில், &ldquo;கடந்த நான்கு ஆண்டுகளாக நகர்மன்றத்தில் எனது வார்டு &nbsp;பகுதிக்கு தேவையான பணிகள் தொடர்பாக &nbsp;விவாதித்துள்ளேன். ஆனால் எனது கட்சி யில் என்னை ஒதுக்கி வைத்து விட்டனர். &nbsp;அதையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு எனது பணிகளை செய்து வந்தேன். இந்த &nbsp;சூழலில் என்னைப்பற்றி வலைதளங்களில் நகர பாஜகவினர் அவதூறு பரப்பி வரு கின்றனர். இது தொடர்பாக பாஜக நகரத் தலைவர் மற்றும் மாவட்டத் தலைவருக்கு தகவல் தெரிவித்தும் எந்தவொரு நடவ டிக்கையும் மேற்கொள்ளவில்லை. பாஜக வில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை&rdquo; என்று கூறினார். பாஜக நகரத் தலைவராகவும் கவுன்சில ராகவும் உள்ள சங்கர சுப்பிரமணியனும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில், அவர் முன்பாகவே பாஜக பெண் கவுன்சிலர், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று புகார் தெரிவித்துப் பேசி யது, தென்காசியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.