பா.ஜ.க.வின் முட்டை அரசியல் மதிய உணவில் சங் பரிவாரத்தின் அநாகரிகத் திணிப்பு!
8 Jul 2026, 9:13 pm
<p><strong>பா.ஜ.க.வின் முட்டை அரசியல் மதிய உணவில் சங் பரிவாரத்தின் அநாகரிகத் திணிப்பு! </strong></p><p>மாட்டிறைச்சித் தடையில் தொடங்கிய சங் பரிவாரத்தின் உணவுத் திணிப்பு, தற்போது மேற்கு வங்கத்தில் பள்ளி குழந்தைகளின் மதிய உணவில் முட்டையைத் தடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் புதிதாக அமைந்துள்ள சுவேந்து அதிகாரி தலைமையிலான பா.ஜ.க. அரசு, பள்ளிகளின் மதிய உணவுப் பொறுப்பை ‘இஸ்கான்’ அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. தங்களின் அசைவ எதிர்ப்பு கொள்கை என்ற பெயரில் இஸ்கான் அமைப்பு குழந்தைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியுள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஊட்டச்சத்து குறைபாட்டுச் சராசரி 31.8% ஆக உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் அது 28.5% ஆக உள்ளது. (ஊட்டச்சத்து குறைபாட்டில் பா.ஜ.க. ஆளும் மத்தியப்பிரதேசம் 39.7%, குஜராத் 35.5% என மிக மோசமான நிலையில் உள்ளன; கேரளா 17.8% உடன் முதன்மையான சுகாதார நிலையில் உள்ளது). அசைவ உணவுப் பழக்கம் கொண்ட மேற்கு வங்கத்தில், ஏழைக் குழந்தைகளுக்குப் புரதச்சத்து வழங்கக்கூடிய மிக மலிவான உணவு முட்டை மட்டுமே. முட்டைக்கு மாற்றாக இஸ்கான் கூறும் பனீர் போன்ற சைவ உணவுகளின் விலை மிக அதிகம். உதாரணத்திற்கு, 10 கிராம் புரதச்சத்து தரும் 50 கிராம் பனீரின் விலை 50 ரூபாய், ஆனால் அதே அளவு புரதத்தை 5 அல்லது 6 ரூபாய் முட்டை தந்துவிடும். அடித்தட்டு குழந்தைகளின் ஊட்டச்சத்தையும், பள்ளி வருகையையும் உறுதி செய்யும் மதிய உணவுத் திட்டத்தில், பா.ஜ.க. புகுத்தியுள்ள இந்த மூர்க்கத்தனமான உணவு அரசியல் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான நேரடித் தாக்குதலாகும்.</p>
