முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

16 Aug 2026, 8:55 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிஜேபி செய்தி தொடர்பாளர் சவுரவ் தாஸ்

‘பள்ளிகளைச் சீரமைப்போம்’ என்ற பெயரில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். அதன்படி மேற்குவங்கத்தில் 26 வயது இளைஞரான அப்துல் உள்ளூர் அரசுப் பள்ளிக்குச் சென்று, மாணவர்களிடம் குறைகளை பற்றிப் பேசியுள்ளார். உடனே பாஜக குண்டர்கள் அப்துலின் வீட்டிற்குச் சென்று அவரைத் கொடூரமாகத் தாக்கினர். அப்துலைக் காப்பாற்ற வந்த அவரது தந்தையையும் கொன்றுள்ளனர். இதுதான் பாஜகவின் முகம்.

ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி பிரசாத்

பீகார் மாநிலம் வினாத்தாள் கசிவுகளின் தலைநகரமாக மாறி வருகிறது. சந்தையில் காய்கறிகள் விற்பது போல வினாத்தாள்களை விற்று வருகின்றனர். கோட்டாவில் (ராஜஸ்தான்) தேர்வு பயிற்சி மையம் இருப்பது போல, பீகாரில் வினாத்தாள் விற்க மையங்கள் முளைத்துவிட்டன.

மணிப்பூர் காங்கிரஸ் பிரிவு

பாஜக எதிர்க்கட்சியினரை மிரட்டி வருவது ஆதாரத்துடன் அம்பலமாகியுள்ளது. மிரட்டலுக்கு உள்ளான திரிணாமுல் மூத்த தலைவர் ஆஷிஷ் பானர்ஜி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அதே போல 20 எம்.பி.க்கள், 50க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஊழல் செய்து பாஜகவின் மிரட்டலுக்கு அஞ்சி, திரிணாமுலை விட்டு வெளியேறியுள்ளனரா? என்ற சந்தேகம் கிளம்பியுள்ளது.

என்சிபி (சரத்) எம்எல்ஏ ஜிதேந்திர அவ்ஹாத்

பாஜகவினர் வந்தே மாதரத்தின் 6 சரணங்களை குறிப்பு இல்லாமல் சொல்ல முடியுமா? அவ்வாறு சொல்லிய பின்பு வந்தே மாதரம் அவமதிப்பு பற்றி பாஜகவினர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

Share
FacebookXWhatsAppTelegram