ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிச் சூழ்ச்சியும் முடக்கப்படும் மாநில உரிமைகளும்! வரவு எனக்கு! செலவு உனக்கு! - அ.அன்வர் உசேன்
11 Jul 2026, 10:05 pm

ஒன்றிய பா.ஜ.க. அரசின் நிதிச் சூழ்ச்சியும் முடக்கப்படும் மாநில உரிமைகளும்! வரவு எனக்கு! செலவு உனக்கு! - அ.அன்வர் உசேன்

ஒன்றிய அரசும் மாநில அரசாங்கங்களும் இந்தியாவில் ஏராள மான மக்கள் நலத் திட்டங் களை அமலாக்குகின்றன. ஆனால், களத்தில் நின்று திட் டங்களைச் செயல்படுத்தும் மாநில அரசுகளின் பங்களிப் போடு ஒப்பிடும்போது, ஒன்றிய அரசாங்கம் இந்தத் திட்டங்களுக்குச் செலவிடும் நிதி மிகக் குறைவாகவே உள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த வரி வருவாயில் பெரும் பகுதியை ஒன்றிய அரசு தன்பக்கம் வளைத்துக் கொள்கிறது. மாநிலங்களில் மாற்றுக் கட்சிகள் ஆட்சியில் இருந் தால், தனது அரசியல் சூழ்ச்சி கள் மூலம் நிதி ஒதுக்கீட்டை முடக்கி, மக்களிடம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக எதிர்மறைக் கருத்துகளை உருவாக்குவதில் பா.ஜ.க. அர சாங்கம் பல முயற்சிகளை மேற்கொள்கிறது. இது குறித்து ‘தி இந்து’ (ஆங்கிலம்) நாளிதழ் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத் தரவுகள் கூட் டாட்சி தத்துவத்தின் மீதான இந்தத் தாக்குதலை அம்ப லப்படுத்தியுள்ளன.

20 ஆண்டுகால நிதிப் பகிர்வு அநீதி

கடந்த 2004-05ஆம் நிதியாண்டில் ஒன்றிய அர சாங்கம் மக்கள் நலத் திட் டங்களுக்கு வெறும் ரூ. 0.3 லட்சம் கோடி செலவு செய்தது. அதே காலகட்டத்தில் மாநில அரசாங்கங்களோ ரூ. 2.13 லட்சம் கோடி செலவு செய்திரு ந்தன. சுமார் 20 ஆண்டுகளு க்குப் பின்னர், 2024-25ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசா ங்கம் மக்கள் நலத் திட்டங்களு க்கு ரூ. 2.46 லட்சம் கோடி செலவு செய்துள்ள நிலையில், மாநில அரசாங்கங்களோ ரூ. 13.05 லட்சம் கோடி செலவு செய்துள்ளன. அதாவது, ஒன் றிய அரசைவிட மாநில அரசா ங்கங்கள் சுமார் 5 முதல் 6 மடங்கு வரை கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய கட்டா யத் தேவை ஏற்பட்டுள்ளது. சில முக்கியச் சமூக நலத் திட்டங்களில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் நிதிச் செல வினங்கள் குறித்த ஒப்பீட்டு விவரம் கீழே உள்ள அட்ட வணையில் தெளிவாகத் தரப் பட்டுள்ளது:

நிதி முடக்கமும் பி.எம்.ஸ்ரீ மிரட்டலும்

மாநில அரசாங்கங்கள் தான் அந்தந்த மாநிலத்து மக்களின் உண்மையான தேவைகளை நேரடியாக மதிப் பிட்டு, அதற்கேற்பத் திட்டங்க ளை வடிவமைக்க முடியும். இந்தத் திட்டங்களை தொய்வின்றிச் செயல்படுத்தப் பெரும் நிதி தேவைப்படுகிறது. ஆனால், ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கமோ மாநில அரசுக ளுக்குத் தேவையான நியாய மான நிதியை ஒருபோதும் ஒதுக்குவது இல்லை. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்க ளுக்கு எத்தகைய கடுமை யான நிதி நெருக்கடியைப் பா.ஜ.க. அரசு தந்தது என்பது நாடு அறிந்தது. உதாரண மாக, ஒன்றிய அரசின் ‘புதிய கல்விக் கொள்கையை’ (NEP) மாநிலங்கள் அப்படியே அம லாக்காவிட்டால், ‘பி.எம்.ஸ்ரீ’ (PM-SHRI) பள்ளி மேம்பாட்டு நிதியைத் தர இயலாது என பா.ஜ.க. அரசு மூர்க்கத்தனமா கக் கூறியது. இதன் காரணமா கத் தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி நிதி ஒரு ரூபாய் கூடத் தராமல் பழி வாங்கப்பட்டது.

சமீபத்தில் கேரளாவில் பதவியேற்றுள்ள காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அர சாங்கம், ஒன்றிய அரசின் இந்த மிரட்டலுக்கு அடிபணி ந்து பி.எம்.ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டில் புதிதா கப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் அரசாங்கம், இந்தத் திட்டத்தை மாநில நலன் கருதி ஏற்க மாட்டோம் என உறுதியாக அறிவித்துள் ளது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், பா.ஜ.க. அர சாங்கம் மாநிலங்களின் உரிமைகளை மதித்து நிதி தரத் தயாராக இல்லை. எனவே, நமது மாநில உரிமைகளை நிலைநாட்ட நாடாளுமன்ற ஜனநாயக வழியிலும், மக்கள் மன்றத்திலும் வாதா டியோ அல்லது போராடியோ உரிமைகளை மீட்பது இன் றையச் சூழலில் மிக அவசிய மான ஒன்றாகும்.

முக்கியச் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒப்பீடு (லட்சம் கோடியில்)

திட்டம் ஒன்றிய அரசு செலவு மாநில அரசுகள் செலவு

சமூக நீதி / பழங்குடியினர் / சிறுபான்மையினர் நலன் ரூ. 0.33 ரூ. 2.03

பள்ளிக்கல்வி ரூ. 0.79 ரூ. 6.83

பொது ஆரோக்கியம் (மருத்துவம்) ரூ. 1.00 ரூ. 3.93

பொது விநியோகத் திட்டம் (ரேஷன்) ரூ. 0.70 ரூ. 2.28

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ரூ. 0.10 ரூ. 0.86