3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி பாஜக: கேள்விக்குறியாகும் இந்திய ஜனநாயகம்! - இரா. சுதிர்
28 Jun 2026, 10:16 pm

3-ல் 2 பங்கு பெரும்பான்மையை நோக்கி பாஜக: கேள்விக்குறியாகும் இந்திய ஜனநாயகம்! - இரா. சுதிர்

இருபதாம் நூற்றாண்டின் பாசிசம் வன்முறை, ராணுவக் குவிப்பு மற் றும் நேரடி சர்வாதி காரத்தைக் கொண்டு கட்டமைக்கப்பட்டது. ஆனால், இருபத்தியொ ன்றாம் நூற்றாண்டின் நவீன பாசிசம் முற்றி லும் மாறுபட்டது. அது ஜனநாயக நிறுவனங் களைப் பயன்படுத்தியே ஜனநாயகத்தை உள்ளிருந்து அரித்து அழிக்கும் தன்மையைக் கொண்டது. இத்தாலிய கம்யூனிஸ்ட் இயக்கத் தின் மாபெரும் தலைவரான பால்மிரோ டோக்ளி யாட்டி, பாசிசம் என்பது ஏதோ ஒரு தனிநபரின் வெறித்தனம் அல்ல; அது “ஆளும் வர்க்கம் தங்களின் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள சட்டப்பூர்வ மற்றும் சட்டத்திற்குப் புறம்பான அனைத்து வழிகளையும் ஒருங்கி ணைத்துப் பயன்படுத்தும் ஒரு சதித்திட்டம்” என்று வரையறுத்தார். தற்போதைய இந்தியச் சூழலில், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி, நாடாளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பா ன்மையைப் பெற்று, இந்திய அரசியலமைப்பை தனக்கு சாதகமாக மாற்றியமைக்க மேற்கொ ள்ளும் முயற்சிகள், டோக்ளியாட்டி எச்சரித்த அந்த ‘அமைப்பியல் பாசிசத்தின்’ நவீன வடிவமாகவே காட்சியளிக்கிறது.

டோக்ளியாட்டியின் பாசிச வரையறையும் இந்திய அரசியலும்

பால்மிரோ டோக்ளியாட்டி பாசிசத்தின் முக்கி யப் பண்புகளாக இரண்டைக் குறிப்பிடுகிறார்:

மக்களாட்சி நிறுவனங்களை உள்ளிருந்தே கைப்பற்றுதல்: பாசிசம் சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும்.

எதிர்க்கட்சிகளற்ற அரசியல் சூழலை உருவாக்குதல்: தங்களைக் கேள்வி கேட்கும் எதிர்க்கட்சிகள இல்லாத ஒற்றை அதிகார மையத்தை உருவாக்குவது. தற்போது இந்தியாவில் இரு அவைகளி லும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்ற இலக்கை (362 இடங்கள்) நோக்கி பாஜக நகரும் வேகம், டோக்ளியாட்டியின் விதிகளோடு பொருந்திப் போகிறது. 2024 பொதுத்தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களை மட்டுமே பெற்றது. அரசியலமைப்பை மாற்றியமைக்க இன்னும் 54 இடங்கள் தேவையாக இருந்தன. இந்த இடைவெளியை நிரப்ப, அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம்தான் “சட்டப்பூர்வமாக கட்சிகளை உடைப்பது”.

பத்தாவது அட்டவணையும் ‘சட்டப்பூர்வ’ கட்சித் தாவல்களும்

இந்திய அரசியலமைப்பின் 10-வது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்), ஒரு கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு நாடாளு மன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் உடைந்தால் மட்டுமே அவர்களுக்குப் பாது காப்பு கிடைக்கும் என்கிறது. ஜனநாயகத்தைக் காக்க உருவாக்கப்பட்ட இந்த விதியை, தங்களுக்குச் சாதகமான ஒரு ஓட்டையாக பாஜக மாற்றி அமைத்துள்ளது. ஏப்ரல் 2026-ல் மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்பிக்களும், ஜூன் 2026-இல் மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸின் 20 எம்பிக்களும் உடைந்து பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்துள்ளனர். இது அதிகார பலம், விசாரணை அமைப்புகளின் அழுத்தம் மற்றும் பதவிகள் மூலமாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட “அமைப்பியல் ரீதியான கட்சி உடைப்பு” ஆகும். இதன் மூலம், நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நோக்கி பாஜக மிக நெருக்கமாக நகர்ந்துள்ளது.

சட்டமன்றங்களை வீழ்த்தி அதிகாரப் பகிர்வை அழித்தல்

பாசிசத்தின் முக்கிய நோக்கம் அனைத்து அதிகாரங்களையும் ஒற்றை மையத்தில் குவிப்பதுதான். கடந்த பத்து ஆண்டுகளில் (2016-2026) ‘ஆபரேஷன் லோட்டஸ்’ என்ற பெயரில் அருணாச்சல பிரதேசம், கோவா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, மகா ராஷ்டிரா என 8-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மற்றும் மாநிலக் கட்சிகள் வீழ்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக, 2013-ல் வெறும் 773 ஆக இருந்த பாஜகவின் மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2026-இல் 1,798 ஆக உயர்ந்துள்ளது. இது மறைமுகமாக மாநிலங்களவை இடங்களை அவர்கள் கைப்பற்றுவதற்குக் வழிவகுக்கிறது. தற்போது 17 மாநிலங்களில் பிரதான எதிர்க்கட்சி யான காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் கூட இல்லாத நிலை உருவாக்கப் பட்டுள்ளது. மாநிலங்களின் குரலாக ஒலிக்கும் மாநிலங்களவையைத் தன்வசப்படுத்துவதன் மூலம், கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை யையே பாஜக சிதைத்து வருகிறது.

நாடாளுமன்ற நடைமுறைகளைத் திசைதிருப்புதல்

மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை என்பது அவையின் மொத்த எண்ணிக்கையில் அல்ல, மாறாக வாக்கெடுப்பின் போது அவை யில் ‘வந்திருந்து வாக்களிப்போரின்’ எண்ணிக்கையில் ஆகும். எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு செய்யும் போதோ அல்லது கூட்ட புறக் கணிப்பு செய்யும் போதோ, இந்தத் தகுதி வரம்பு குறைகிறது. இதனைப் பயன்படுத்தி, தங்க ளுக்குச் சாதகமான சட்டங்களை பாஜக எளி தாக நிறைவேற்றிக் கொள்கிறது. 2026 ஏப்ரலில் கொண்டுவரப்பட்ட ‘தொகுதி மறுவரையறை சட்டமுன்வடிவு’ போதிய பெரும்பான்மை இல்லாததால் தோல்வி யடைந்தது. ஆனால், அந்தத் தோல்வியைக் கூட “எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டைத் தடுக்கின்றன” என்ற ஒரு போலிப் பிரச்சாரமாக மாற்றி, 2029 பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆயுதமாக பாஜக மாற்றியது.

நீதிமன்றங்கள் எதிர் அரசியல் வேகம்

பாசிசம் எப்போதும் நீதித்துறையின் வேகத்தை விடவும் வேகமாகத் தன் அரசியல் காய்களை நகர்த்தும். 2023-ல் உச்சநீதி மன்றத்தின் ‘சுபாஷ் தேசாய்’ வழக்கின் தீர்ப்பில், “எம்பிக்கள்/எம்எல்ஏக்கள் பிரிவது மட்டுமே கட்சியின் உண்மையான பிளவாகாது” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பின்படி பார்த்தால், ஆம் ஆத்மி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்களின் பிளவுகள் சட்டப்பூர்வமாகச் செல்லாதவை. இருப்பினும், சபாநாயகர் ஆளும் கட்சியை சேர்ந்தவராக இருக்கும்போது, அவர் தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க மாதக் கணக்கிலோ அல்லது ஆண்டு கணக்கிலோ தாமதம் செய்கிறார். நீதிமன்றங்கள் தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவதற்குள், செய்யப்பட வேண்டிய அரசியல் சேதங்கள் அரங்கேறிவிடுகின்றன.

பாஜகவின் சதித் திட்டம்

பாஜக இந்த மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்று என்ன செய்யக் காத்திருக்கிறது? தொகுதி மறுவரையறையின் மூலம் மக்களவை இடங்களை 543-லிருந்து 850 ஆக உயர்த்துவது. இது மக்கள் தொகை அதிகமாக உள்ள வட இந்திய மாநிலங்களுக்கு அதிக இடங்களையும், தென் மாநிலங்களுக்குக் குறைவான இடங்களையும் வழங்கி, தென் மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை நசுக்கும். ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் மாநிலக் கட்சிகளின் அடையாளங்களை அழித்து, இந்தியாவின் பன்முகத் தன்மையை ஒழிப்பது. அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தம் செய்து இந்தியாவை ஒற்றையாட்சி முறை கொண்ட ஒரு நாடாக மாற்றுவது.

நவபாசிசத்தை வீழ்த்த சிபிஐ(எம்) காட்டும் வழி

பாஜகவின் இந்த அமைப்பியல் பாசிச தந்திரங்களை எதிர்கொள்ளும் மாற்று அரசியல் பாதையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரையில் நடைபெற்ற அதன் 24-வது அகில இந்திய மாநாட்டில் முன்வைத்துள்ளது. பால்மிரோ டோக்ளியாட்டி அன்று இத்தாலியில் பாசிசத்திற்கு எதிராகக் கூறிய அதே வெகுஜனப் போராட்ட உத்தியை, சிபிஐ(எம்) இன்றைய இந்தியச் சூழலுக்கு ஏற்ப பின்வரும் முக்கியப் புள்ளிகள் மூலம் முன்மொழிகிறது: தத்துவார்த்த ஒருமைப்பாடு: ஆர்.எஸ்.எஸ் - பாஜகவின் கார்ப்பரேட் - அதிதீவிர வலதுசாரிக் கொள்கைகளைத் தத்துவார்த்த ரீதியாக எதிர்க்கும் அனைத்து மதச்சார்பற்ற மற்றும் மாநிலக் கட்சிகளின் பரந்த ஒருமைப்பாட்டை உருவாக்க வேண்டும்.

வாழ்வாதாரப் போராட்டங்கள்: கார்ப்ப ரேட் நலன்களுக்கான பாஜகவின் பொருளா தாரக் கொள்கைகளுக்கு எதிராக, தொழிலா ளர்கள், விவசாயிகள் மற்றும் நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் போராட்டங்களை முன்னிறுத்துவதே பாஜகவின் வாக்கு வங்கியைச் சரிப்பதற்கான ஒரே வழி.

நிறுவனங்களைப் பாதுகாத்தல்: தன்னாட்சி நிறுவனங்கள் பாஜகவின் ஏவற்படை யாக மாறுவதை எதிர்த்து, மக்கள் மத்தியில் தொடர் பிரச்சாரங்களையும், சட்டப் போராட்டங் களையும் தீவிரப்படுத்த வேண்டும். நாடாளுமன்றப் பெரும்பான்மையைக் காட்டும் பாஜகவின் ‘தேர்தல் வழி சர்வாதி காரத்தை’, மக்களின் ‘வர்க்கப் போராட்டங்கள்’ மற்றும் ‘மதச்சார்பற்ற தத்துவார்த்த விழிப்புணர்வு’ மூலம் மட்டுமே வீழ்த்த முடியும் என்ற மார்க்சியப் பார்வையை சிபிஐ(எம்) தனது அரசியல் தீர்மானத்தில் பதிவு செய்துள்ளது.

ஜனநாயகமா? அல்லது தேர்தல் வழி சர்வாதிகாரமா?

பால்மிரோ டோக்ளியாட்டி, “நாடாளுமன்றத் திற்குள்ளே நடக்கும் போராட்டங்கள் மட்டும் போதாது; பாசிசத்தின் தந்திரங்களை மக்க ளுக்குத் தெளிவுபடுத்தி, வெகுஜன விழிப்பு ணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்றார். இன்று இந்திய ஜனநாயகம் ஒரு முக்கிய மான கட்டத்தில் நிற்கிறது. தங்களின் அதிகார வெறிக்காகக் கட்சிகளை உடைத்து, சட்டங் களை வளைத்து, எதிர்க்கட்சிகளே இல்லாத ஒரு நாட்டை உருவாக்கத் துடிக்கும் பாஜகவின் முயற்சிகள், இந்திய ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்கும் திட்டமிட்ட படுகொலையாகவே பார்க்கப்பட வேண்டும். விழித்துக் கொள்ள வேண்டியது இந்திய மக்களே!