தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை

10 Apr 2026, 5:30 am
அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை

அதிமுக முகமூடியுடன் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக முயற்சி

பழனி, கந்தர்வகோட்டை பிரச்சாரத்தில் பெ.சண்முகம் எச்சரிக்கை. பழனி/கந்தர்வகோட்டை, ஏப். 9 - தமிழகத்தில் அதிமுக என்ற முகமூடியை அணிந்து கொண்டு, குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. மாநிலத்தின் அமைதியைப் பாதுகாத்திடவும், பாஜகவின் நிதி திட்டங்களை முறியடிக்கவும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் எச்சரிக்கை விடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தொகுதி சிபிஎம் வேட்பாளர் என். பாண்டி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதி சிபிஎம் வேட்பாளர் எம். சின்னதுரை ஆகியோரை ஆதரித்து அவர் எழுச்சிமிகு பரப்புரை மேற்கொண்டார். தமிழகத்தின் அமைதியைக் குலைக்க பாஜகவின் திரைமறைவுத் திட்டம். பழனி ஆயக்குடியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பெ.சண்முகம், அதிமுக - பாஜக கூட்டணியின் ஆபத்துக்களை விளக்கினார்.

நிதி ஒதுக்கீட்டில் ஒன்றிய பாஜக அரசின் பாரபட்சமான போக்கைக் கடுமையாகச் சாடிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் 16 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கிய மோடி அரசு, சமஸ்கிருதத்திற்கு 3,500 கோடி ரூபாய்க்கு மேல் வாரி வழங்கியுள்ளதாகக் குற்றம் சாட்டினார். ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற வகையில் பாஜக அரசு தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருகிறது.

திமுக அரசின் சாதனைகளும் புதிய வாக்குறுதிகளும். கந்தர்வகோட்டை தொகுதியில் பேசிய பெ.சண்முகம், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் 90 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார். மகளிர் உரிமைத் தொகை, கட்டணமில்லாப் பேருந்து பயணம், காலை உணவுத் திட்டம் போன்றவை கடைக்கோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளன.

விஜயியின் தமிழக வெற்றிக் கழகம் குறித்துப் பேசிய அவர், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு பவுன் மோதிரம் வழங்குவது போன்ற நடைமுறைக்குச் சாத்தியமற்ற வாக்குறுதிகளைத் தவெக தலைவர் விஜய் அளித்து வருவதாகத் தெரிவித்தார். தென் மாநிலங்களின் மொத்த வருவாயைக் கொண்டு வந்தாலும் இதனை நிறைவேற்ற முடியாது என அவர் விமர்சித்தார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.