அசாமில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி 8,000 பேர் காங்கிரஸில் இணைந்தனர்
11 Nov 2025, 3:41 pm
<p><strong>அசாமில் பாஜகவுக்கு மீண்டும் அதிர்ச்சி 8,000 பேர் காங்கிரஸில் இணைந்தனர்</strong></p>
<p>கவுகாத்தி அசாமில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா (காங்கி ரஸ் கட்சியில் இருந்தவர்) உள் ளார். ஹிமந்தா பிஸ்வாவின் தொடர்ச்சியான வகுப்புவாதச் சம்பவங்களுக்கு அசாம் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வரு கின்றனர். குறிப்பாக ஆளும் பாஜகவுக்குள்ளேயே ஹிமந்தா பிஸ்வாவின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ராஜென் கோகைன், 3 முன் னாள் எம்எல்ஏக்கள் என பல முக்கியத் தலைவர்கள், ஆயி ரக்கணக்கான தொண்டர்கள் பாஜகவிலிருந்து சமீபத்தில் (செப்., அக்., மாதங்களில்) காங் கிரஸ் கட்சியில் இணைந்தனர். தொடர்ந்து, நவம்பர் 10ஆம் தேதி 8,000க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந் துள்ளனர். அவர்களில் 98% பாஜகவில் இருந்து வந்தவர்கள் என செய்திகள் வெளியாகி யுள்ளன. இதுதொடர்பாக மக்க ளவை எதிர்க்கட்சித் துணை தலைவரும், அசாம் காங்கி ரஸ் தலைவருமான கவுரவ் கோகோய் கூறுகையில்,”அசாம் மாநிலத்தில் நவ., 10 அன்று ஒரே நாளில் 8,000க்கும் மேற்பட்டோர் காங்கிரஸ் கட்சியில் இணைந் தனர். இது எதிர்க்கட்சி முகாமில் (பாஜக) பதற்றத்தை உருவாக்கி யுள்ளது. மக்கள் அமைதியாக வும் கண்ணியமாகவும் வாழும் ஒரு அசாமை உருவாக்க நாங் கள் நல்ல பாதையில் பயணிக்கி றோம்” என அவர் கூறியுள்ளார். 2026ஆம் ஆண்டு அசாமில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தங்கள் கட்சி யின் முக்கிய மற்றும் மூத்த தலை வர்கள், தொண்டர்கள் ஆயி ரக்கணக்கில் காங்கிரஸ் கட் சிக்கு தாவி வருவதால் பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது.</p>
