முந்தய பக்கம்

கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக

11 Apr 2026, 5:30 am
கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக

கேரளத்தில் வாக்குப்பதிவு முடிவடைந்த உடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக

கோட்டயம்: கேரளத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த அடுத்த நாளே, பாஜக தனது மதவெறிப் பேச்சைத் துவங்கியுள்ளது. கேரள பாஜக மூத்த தலைவர் பி.சி. ஜார்ஜ் கத்தோலிக்க ஆயர்களைக் கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், திருச்சபை ஏன் எப்.சி.ஆர்.ஏ சட்டத்திற்கு எதிராகத் எதிர்ப்பு தெரிவிக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். மேலும், அரசியல் பேசும் ஆயர்களை அரசியல்வாதிகளாகவே கருதுவோம் என்றும் அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க மாட்டோம் என்றும் வெறுப்புப் பேச்சை வெளிப்படுத்தினார்.

வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியாக இருந்த பி.சி.ஜார்ஜ், தேர்தல் முடிந்தவுடன் தனது மதவெறிப் பக்கத்தைக் காட்டத் தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram