கேரளத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக
11 Apr 2026, 5:30 am
<p><strong>கேரளத்தில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் மதவெறுப்பை கக்கத் துவங்கிய பாஜக</strong></p><p>140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் வியாழனன்று ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நடைபெறும் வரை கேரளத்தில் பாஜகவினர் வகுப்புவாதம் தொடர்பான கருத்துக்களை தெரிவிக்காமல் இருந்த னர். ஆனால் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற அடுத்த நாளே, பாஜக தனது மதவெறிப் பேச்சைத் துவங்கியுள்ளது. அதாவது கேரள பாஜக மூத்த தலை வர் பி.சி. ஜார்ஜ் வெள்ளியன்று கத்தோ லிக்க ஆயர்களைக் கடுமையாக விமர்சித் தார். கோட்டயத்தில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பின் போது அவர் மேலும் பேசுகையில்,“மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வெளிநாட்டு பங்க ளிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் (எப்சி ஆர்ஏ) சட்டத்திற்கு கிறிஸ்தவத் திருச்சபை கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது நல்ல திட்டம். ஆனால் அவர்களுக்கு புரியவில்லை. காஞ்சிரப்பள்ளி மறை மாவட்ட ஆயர் மார் ஜோஸ் புளிக்கல்லு மற்றும் கன்னியாஸ்திரிகள் எதிர்க் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இது சரியானதா? அவ்வாறு சொல்ல அவருக்கு என்ன உரிமை இருக்கிறது? திருச்சபை என்பது பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் ஒரு அங்கமா? பூஞ்சாரில் போட்டியிட்ட வேட் பாளர்களில் தான் மட்டுமே திருச்சபை யின் நலனுக்காக உழைத்தவன். சில திருச்சபை தலைவர்கள் வெட்கமற்ற வர்கள். அரசியல் பேசும் ஆயர்களை நாங் கள் அரசியல்வாதிகளாகவே கருது வோம். அவர்களுக்குரிய மரியாதையை அளிக்க மாட்டோம்” என திருச்சபை ஆயர்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சைக் கொட்டினார். பி.சி. ஜார்ஜ் கோட்டயம் மாவட்டத் தில் கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பூஞ்சார் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார். அதே போல அவரது மகன் ஷோன் ஜார்ஜ், மத்திய கேரளாவின் மற்றொரு முக்கிய கிறிஸ்தவப் பகுதியான பாலாவில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டார். இருவரும் கிறிஸ்த வர்கள் அதிகம் உள்ள பகுதியில் போட்டி யிட்டனர். வாக்குப்பதிவு முடியும் வரை அமைதியாக இருந்த பி.சி.ஜார்ஜ், வாக்குப்பதிவு முடிந்தவுடன் பாஜகவின் மதவெறி வெறுப்பை கக்கத் தொடங்கி யுள்ளார்.</p>
