தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை! ‘எழுத்தர் பிழை’ என உருட்டும் அதிகாரிகள்!
24 Mar 2026, 3:23 pm
<p><strong>தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை! ‘எழுத்தர் பிழை’ என உருட்டும் அதிகாரிகள்! </strong></p>
<p>அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்ட நடுநிலையான அமைப்பான தேர்தல் ஆணையம், பாஜகவின் ‘கிளை அலுவலகம்’ போலச் செயல்படுகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும் வகை யில் ஒரு பகீர் சம்பவம் கேரளத்தில் அம்பலமாகி யுள்ளது. ஆணையத்தின் லெட்டர் பேடில் பாஜக சின்னம் கேரளத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கடந்த மார்ச் 22-ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடமிருந்து ஒரு அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் வந்தது. 2019-ஆம் ஆண்டு தேர்தல் விதிகளை விளக்கும் அந்த ஆவணத்தின் மேலே, தேர்தல் ஆணையத்தின் முத்திரைக்குப் பதிலாக ‘பாஜக கேரளப் பிரிவு’-ன் முத்திரை பதிக்கப்ப ட்டிருந்தது! இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த எதிர்க் கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை யைக் கேள்வி எழுப்பிக் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அதிகாரிகளின் சப்பைக்கட்டு விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததும் களமிறங்கிய தலைமைத் தேர்தல் அதிகாரி, “இது ஒரு சாதாரண எழுத்தர் பிழை (Clerical Error) மட்டுமே; தவறு கவனிக்கப்பட்டவுடன் அந்த ஆவணம் திரும்பப் பெறப்பட்டது” என மழுப்பியுள்ளார். ஆனால், ஒரு நடுநிலையான அரசு அலுவலகத்திற்குள் பாஜகவின் முத்திரை எப்படி வந்தது? அதை அரசு அதிகாரி எப்படித் தனது கணினியில் சேமித்து வைத்தார்? என்ற எதிர்க்கட்சி களின் நியாயமான கேள்விக்கு அதிகாரிகளிடம் பதிலில்லை. தேர்தல் ஆணையத்தை பாஜக தனது கைப்பாவை யாகப் பயன்படுத்தி வருகிறது என்பதையும், அதி கார வர்க்கத்தின் ஒரு பகுதி ஆளுங்கட்சிக்கு மறைமுக மாகச் சேவை செய்கிறது என்பதையும் இந்த ‘முத்திரை நாடகம்’ அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டி யுள்ளது. சிபிஎம் உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணி யினர் இதற்கு எதிராகக் கேரளத்தில் தீவிரப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
