எம்எல்சி தேர்தல் நாக்பூர், வாரணாசியில் பாஜகவிற்கு பலத்த அடி
29 Oct 2026, 9:41 pm

எம்எல்சி தேர்தல் நாக்பூர், வாரணாசியில் பாஜகவிற்கு பலத்த அடி

புதுதில்லிஉத்தரப்பிரதேசம், பீகார், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருந்த பட்டதாரிகள், ஆசிரியர்கள் என 28 சட்டமேலவை (எம்எல்சி) தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை புதனன்று நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் கர்நாடகாவைத் தவிர மற்ற 3 மாநிலங்களிலும் பாஜகவின் அதிகார மற்றும் பணபலத்தை மீறி எதிர்க்கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளன.

உத்தரப்பிரதேசம்பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 11 எம்எல்சி இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் மீரட் - பட்டதாரிகள் (சஹாரன்பூர்),மீரட் ஆசிரியர்கள், மொராதாபாத் ஆசிரியர்கள், லக்னோ ஆசிரியர்கள், ஆக்ரா பட்டதாரிகள், கோரக்பூர் - ஆசிரியர்கள் (பைசாபாத்) உள்ளிட்ட 6 தொகுதிகளில் பாஜக வென்றது. அதே போல ‘இந்தியா’ அணியில்அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி வாரணாசி ஆசிரியர்கள், வாரணாசி பட்டதாரிகள், ஆக்ரா ஆசிரியர்கள், அலகாபாத் பட்டதாரிகள் (ஜான்சி), லக்னோ பட்டதாரிகள் உள்ளிட்ட 5 தொகுதிகளை கைப்பற்றியது.

உத்தரப்பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜகவிற்கு இணையாக மற்றும் ஒரு தொகுதி குறைவாகவே சமாஜ்வாதிவென்றுள்ளது. இது பாஜகவிற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாரணாசி பிரதமர் மோடியின் மக்களவை தொகுதி ஆகும். அந்த தொகுதியில் நடைபெற்ற 2 தொகுதிகளிலும் சமாஜ்வாதி அபாரவெற்றிப் பெற்றுள்ளது பாஜக மற்றும் மோடிஅரசுக்கு பலத்த அடியாக பார்க்கப்படுகிறது.

நாக்பூரை இழந்த பாஜகபாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிரா மாநிலத்தின் 5 சட்டமேலவை தொகுதிகளில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கட்சியான சிவசேனா (ஷிண்டே) தலா ஒன்று என இரண்டு தொகுதிகளில் (புனே ஆசிரியர்கள், அமராவதி ஆசிரியர்கள்) மட்டுமே வென்றுள்ளன. ஆனால் ‘இந்தியா’ அணிக் ட்சிகள் 3 தொகுதிகளில் வென்று அசத்தியுள்ளன.

நாக்பூர் பட்டதாரி தொகுதியை காங்கிரஸ்கட்சியும், புனே பட்டதாரிகள், அவுரங்காபாத் பட்டதாரிகள் (சத்ரபதி சம்பாஜிநகர்) தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சிகளும் கைப்பற்றியுள்ளன. குறிப்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள நாக்பூர், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் மற்றும் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரின் சொந்த ஊராகும். இருவரும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்தத் தொகுதியில் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நெருக்கமான நிதின் கட்கரி ஜூலை 1990 முதல் மே 2014 வரை 24 ஆண்டுகள் தொடர்ச்சியாக மேலவை உறுப்பினராகஉள்ளார் என்ற நிலையில், நாக்பூரை காங்கிரஸ் கட்சி எளிதாக கைப்பற்றி, இந்துத்துவா கூடாரத்தை நடுங்க வைத்துள்ளது. அதேபோல பாஜகவால் உடைக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி 2 இடங்களைகைப்பற்றியுள்ளது. இது மகாராஷ்டிராவில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் மகாராஷ்டிராவில் பாஜகவின் படுதோல்வியால் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு எதிராககோஷ்டி பூசல் தீவிரமடைந்துள்ளது.

பீகாரில் பாஜக திணறல்பீகாரில் மொத்தமுள்ள 8 இடங்களையும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் (ஜேடியு) கைப்பற்றும் என தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தொடர்ச்சியாக அறிக்கை வெளியிட்டனர். ஆனால் பாஜக - ஜேடியு கூட்டணி 4 இடங்களை (திருஹுத் ஆசிரியர்கள், தர்பங்கா பட்டதாரிகள், கோசி பட்டதாரிகள் - பாஜக,பாட்னா பட்டதாரிகள் - ஐக்கிய ஜனதாதளம்) மட்டுமே கைப்பற்றியது. ‘இந்தியா’ அணியில்அங்கம் வகிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம் பாட்னா ஆசிரியர்கள் தொகுதியிலும், தர்பங்கா ஆசிரியர்கள் தொகுதியில் ஜனசுராஜ் கட்சியும், சரண் ஆசிரியர்கள், திருஹுத் பட்டதாரிகள் தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றனர்.

கர்நாடகாகர்நாடக மாநிலத்தில் பெங்களூரு ஆசிரியர்கள் (ஜேடிஎஸ்), வட-கிழக்கு ஆசிரியர்கள், மேற்கு பட்டதாரிகள், தென்-கிழக்குபட்டதாரிகள் (மற்ற 3 தொகுதிகள் பாஜக) என 4 தொகுதிகளையும் பாஜக அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதாதளம் (ஜேடிஎஸ்) கட்சிகள் வென்றன.