வெள்ளையர் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தொழிலாளர் நிலை மோசம்
11 Jul 2026, 9:36 pm

வெள்ளையர் ஆட்சியை விட பாஜக ஆட்சியில் தொழிலாளர் நிலை மோசம்

கே.பாலகிருஷ்ணன் சாடல் சென்னை, ஜூலை 11 - நாட்டின் விடுதலைக்கு முந்தைய வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சியில் தொழிலாளர்களுக்கு இருந்த சவால்களை விட, இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சியில் தொழிலாளர்களின் நிலை மிக வும் மோசமாக உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப் பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மணவழகர் மன்றத்தின் 70 ஆவது ஆண்டு முத்தமிழ் விழா, தியாகராய நகர் சர் பி.டி. தியாகராயர் கலையரங்கத்தில் நடை பெற்றது. இதில் கலந்து கொண்டு கே.பால கிருஷ்ணன் பேசியதாவது:

முரண்பாடுகளைக் கடந்த மனிதநேயம்

தற்போதைய இக்கட்டான அரசியல் சூழ லில், கருத்து வேறுபாடுகளைக் கடந்து மனித நேயத்துடன் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். கொள்கை ரீதியாகத் தந்தை பெரி யாரும், திரு.வி.க. அவர்களும் வடதுருவம், தென் துருவம் என முரண்பட்டிருந்தாலும், தனிமனித விரோதமின்றி பொது நோக்கத்திற்காக இணைந்து பணியாற்றியது இன்றைய அரசியல் வாதிகளுக்குச் சிறந்த பாடமாகும். உரைநடை இலக்கியத்தைத் தமிழகத்தில் வளர்த்தெடுத்த திரு.வி.க., விடுதலைப் போ ராட்டத்தோடு உழைக்கும் வர்க்கத்தின் நலனுக் காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். 1921 ஆம் ஆண்டு சக்கரை செட்டியாருடன் இணைந்து இந்தியாவிலேயே முதன்முதலில் ‘சென்னை தொழிற்சங்கம்’ எனும் அமைப் பைத் தொடங்கி, தொழிலாளர் இயக்கத்திற்கு வித்திட்டவர் அவர். பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்கு முறைகளையும், சாதிய மோதல்களையும் மீறி, பி.என்.சி. மில்லில் ஆறு மாதங்கள் நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அவர் வெற்றி கரமாக நடத்திக் காட்டினார்.

உரிமைகளைப் பறிக்கும் சட்டங்கள்

ஆனால், இன்றைய ஒன்றிய பாஜக ஆட்சி யில் தொழிற்சங்கங்களை உருவாக்குவதே பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு தொழிற் சங்கத்தைப் பதிவு செய்ய 100 தொழிலாளர் களின் கையெழுத்து கட்டாயம் என்ற புதிய கட்டுப் பாடுகளும், 8 மணி நேர வேலை எனும் அடிப் படை உரிமையைப் பறிக்கும் சட்டங்களும் தொழி லாளர்களின் நலனைச் சிதைத்துள்ளன. நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்தத் தொழிலா ளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவர்கள் நவீனக் கொத்தடிமைகளைப் போல நடத்தப்படு கின்றனர். திருவள்ளூரில் விஷவாயு கசிவால் 15 வயது பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்த துயரம், தற்போதைய தொழிலாளர் உரிமையின் அவல நிலைக்குச் சாட்சியாக உள்ளது. திரு.வி.க. வாழ்ந்த காலத்தில் தொழி லாளர் வர்க்கத்திற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களைப் போல, தற்போதைய கால கட்டத்திலும் வீரியமிக்க போராட்டக் குணத் தோடு செயல்பட வேண்டியுள்ளது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார். இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் முகமது அலி, மண வழகர் மன்றச் செயலாளர் கன்னியப்பன் உள்ளிட் டோர் உரையாற்றினர்.