தீக்கதிர் முக்கிய செய்திகள்
4 Apr 2026, 4:02 pm

வாரிசு அரசியலை வளர்க்கும் பா.ஜ.க! மொடக்குறிச்சியில் ஒரு ‘மருமகள்’ பாசம்!

வாரிசு அரசியலை வேரோடு அறுப்போம் என்று முழங்கும் பாஜக, மொடக்குறிச்சியில் கிருத்திகா சிவகுமாரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. இவர் யார் தெரியுமா? அங்கிருக்கும் பாஜக எம்.எல்.ஏ-வின் மருமகள்! இவருடைய கணவர் (எம்.எல்.ஏ-வின் மகன்) ஏற்கெனவே 2024-இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டவர். இப்போது மருமகளுக்கு பாஜகவில் சீட். “வாரிசு அரசியலை நாங்கள் எதிர்க்கிறோம்” என்று பாஜக சொல்வதை ஊரே சிரிக்கும்படிச் செய்திருக்கிறது இந்த மொடக்குறிச்சி வேட்பாளர் அறிவிப்பு. தாமரை மலருதோ இல்லையோ, பாஜகவில் வாரிசுகள் மட்டும் நன்றாகவே மலருகிறார்கள்!

சீமானின் கார்ப்பரேட் காதல்

“இலவசங்கள் மூலம் மக்களை ஏமாற்று கிறார்கள்” என்று திமுக, அதிமுக, தவெக என அனைவரையும் சீமான் சாடுகிறார். ஆனால் கார்ப்பரேட்டுகளுக்குத் தரப்படும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் வரிச்சலுகைகள் பற்றி அவர் மூச்சு விடுவதில்லை. ஒருபுறம் சோசலிச நாடுகள் முன்மாதிரி என்கிறார், மறுபுறம் முதலாளித்துவ நாடுகளைப் புகழ்கிறார். கார்ப்பரேட்டுகளின் கடன் தள்ளுபடி பற்றி வாய் திறக்காத சீமான், ஏழை மக்களுக்குத் தரப்படும் நலத்திட்டங்களை மட்டும் ‘இலவசம்’ என்று கொச்சைப் படுத்துவது ஏன்? இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்குச் சலுகை அளிப்பதில் மோடி அரசுக்குச் சீமான் மறைமு கமாகத் துணை போகிறாரா என்ற சந்தேகம் எழுகிறது!

‘விஷம்’ வைக்கும் அளவிற்கு வீழ்ந்ததா அரசியல்?

“ஒன்னு என்னைக் கொன்னுடு... இல்லன்னா நாட்டை என்கிட்ட கொடு” என்று சீமான் குன்னூரில் விரக்தியாகப் பேசியுள்ளார். 15 ஆண்டுகால அரசியல் சவடால்கள் இப்போது ‘சாப்பாட்டில் விஷம்’ வைக்கும் அளவிற்குச் சோகமயமாகிவிட்டதா? வீர வசனங்களும், வாய்ச்சவடா ல்களும் ஒரு காலக்கட்டம் வரைதான் எடுபடும். பெரியார் எதிர்ப்பு, பாஜக ஆதரவுப் போக்கு எனத் தடம் மாறிப் போன சீமான், இப்போது மக்கள் ஆதரவு கிடைக்காத விரக்தியில் புலம்புகிறார். அரசியல் என்பது வெறும் ஆவேசமான பேச்சல்ல; அது கொள்கை உறுதி. அது புரியாமலே வீழ்கிறார் சீமான்!