தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மேற்கு வங்கத்தில் இலவசங்களை வாரி இறைத்த பாஜக

11 Apr 2026, 5:30 am
மேற்கு வங்கத்தில் இலவசங்களை வாரி இறைத்த பாஜக

மேற்கு வங்கத்தில் இலவசங்களை வாரி இறைத்த பாஜக

பிரதமர் மோடி ‘ரேவடி கலாச்சாரம்’ என்ற பதத் தைப் பயன்படுத்தி, வாக்குகளுக்காக இலவ சங்களை வழங்குவது நாட்டின் வளர்ச்சிக்கும், பொருளாதா ரத்திற்கும் ஆபத்தானது என்று பலமுறை கூறி இருக்கிறார். அதே போல இலவச மின்சா ரம், கடன் தள்ளுபடி போன்ற வை மாநிலங்களின் நிதி நிலையைச் சீர்குலைக்கும் என்பது கூட பாஜகவினரின் வாதம் தான். மக்கள் உழைக் காமல் இலவசங்களைப் பெறு வது நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் என்று ஒன்றிய அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். ஆனால் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கத்தில் பாஜக இலவ சங்களை வாரி இறைத்துள் ளது. ஒன்றிய உள்துறை அமை ச்சர் அமித் ஷா வெள்ளியன்று கொல்கத்தாவில் வெளியிட்ட பாஜகவின் தேர்தல் அறிக்கை யில்,“பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநிலத்தில் உள்ள தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி வழங்கப்படும். வேலையில் லாத இளைஞர்களுக்கு வாழ்வாதார உதவியாக மாதம் ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படும். மீன்பிடித் தொ ழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி (கிசான் சம்மான் நிதி போன்ற திட்டம்) வழங்கப்படும். பெண் குழந்தைகளுக்கு மழலையர் பள்ளி முதல் முதுகலை படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும்” என இலவ சங்களை அறிவித்துள்ளார். அதே போல மதவெறிக் கண்ணோட்டத்துடன் முஸ்லிம் மக்களை ஒடுக்கும் நோக்கத் தில்,“வங்கதேச எல்லையில் இருந்து சட்டவிரோதமாக ஊடு ருவுபவர்களைத் (பாஜக முஸ்லிம் மக்களை மறைமுக மாக கூறும் வார்த்தை) தடுக்க ‘தேசிய பாதுகாப்பு கட்டமைப்பு’ உருவாக்கப் படும். ஊடுருவல் முற்றிலும் ஒழிக்கப்படும்” என்றும் அமித் ஷா தேர்தல் வாக்குறுதிகளில் வெறுப்புப் பேச்சைக் கக்கி யுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.