பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி அளிக்க ஆள்பிடி வேலையைத் தொடங்கிய பாஜக - நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்
2 Nov 2026, 9:47 pm

பஞ்சாப்பில் ஆம் ஆத்மிக்கு நெருக்கடி அளிக்க ஆள்பிடி வேலையைத் தொடங்கிய பாஜக - நெருங்கும் சட்டமன்றத் தேர்தல்

பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பகவந்த் மான்உள்ளார். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலையொட்டி 40 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம்ஆத்மி சனியன்று வெளியிட்டது. ஆனால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆம் ஆத்மியின் அமிர்தசரஸ் வடக்கு தொகுதி எம்எல்ஏ குன்வர் விஜய் பிரதாப் சிங், சமானா தொகுதி எம்எல்ஏ சேத்தன் சிங் ஜோரமஜ்ரா, சனூர் தொகுதி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா ஆகியோர் திங்களன்று பாஜகவில் இணைந்தனர். தொடர்ந்து கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறி, இந்த 3 பேரின்சட்டமன்ற உறுப்பினர் பதவியைரத்து செய்ய பஞ்சாப் சட்டமன்றச்சபாநாயகரை அணுகப்போவதாக ஆம் ஆத்மி அறிவித்துள்ளது.

காங்கிரஸ்பஞ்சாப் மாநிலத்தில் பாஜக பலமான கட்சி கிடையாது. சிரோமணி அகாலி தளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் முதுகில் ஏறித் தனது இருப்பைக் காட்டி வருகிறது. அதாவதுதமிழ்நாட்டில் பாஜகவிற்கு அதிமுக என்றால், பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளம். இத்தகைய சூழலில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று, பஞ்சாப்பில்ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்என்ற எண்ணத்தில் பாஜக பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. இதன் முதல் படியாக இந்தஆண்டின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியினரை வளைத்து அக்கட்சியை உடைக்க முயன்றது. ஆனால், டி.கே.சிவக்குமார், பூபேஷ் பாகேல்உள்ளிட்டகாங்கிரஸ் மூத்த தலைவர்கள் பாஜகவின் சதியை முறியடித்தனர்.

ஆம் ஆத்மிஇதனால் ஆள்பிடி வேலையை ஆம் ஆத்மியை பக்கம் திருப்பியது பாஜக. கடந்த ஏப்ரல் மாதம் ராகவ் சதா, சந்தீப் பாதக், ஹர்பஜன் சிஙஉள்ளிட்ட 7 ஆம் ஆத்மி எம்.பி.க்களை பாஜக தங்கள் பக்கம் வளைத்தது. ராகவ் சதாவிற்கு முதலமைச்சராக அறிவித்து, ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு ரூ. 5 கோடி வழங்கி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தீவிரமாகஇறங்கியது. ஆனால் முதலமைச்சர் பகவந்த் மான், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால்,தில்லி ஆம் ஆத்மி தலைவர் சவுரப் பரத்வாஜ், முன்னாள் முதலமைச்சர் அதிஷி(தில்லி) ஆகியோர் பாஜகவின் தில்லுமுல்லுகளைத் துடைத்தெறிந்தனர். இதனால் கடந்த சில மாதங்களாக பஞ்சாப் பாஜக பம்மிய நிலையில் இருந்தது.

அமித் ஷா வருகைஅதன்பிறகு, கடந்த மாதம் அமித் ஷா திடீரென பஞ்சாப் மாநிலத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குறுகிய காலத்தில் 3 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்பே, ாஜகவில் இணையும் பட்டியலில் மேலும் 21 ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் முதலமைச்சர் பகவந்த் மான், அரவிந்த் கெஜ்ரிவால்,மணீஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மிதேசியத் தலைவர்கள் பஞ்சாப் அரசியல் நிலைமை குறித்துத் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.