தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடரும் பணபலம்; குதிரை பேரம்; மிரட்டல்... மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டம்

21 Jun 2026, 9:13 pm
தொடரும் பணபலம்; குதிரை பேரம்; மிரட்டல்... மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டம்

தொடரும் பணபலம்; குதிரை பேரம்; மிரட்டல்... மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோதாக்களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டம்

திரிணாமுல், சிவசேனாவை தொடர்ந்து சமாஜ்வாதியை உடைக்க தீவிரம்

மேற்குவங்கத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றி யப் பின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை பாஜக இரண் டாக உடைத்து, மூன்றில் 2 பகுதி எம்.பி., மற்றும் எம்எல்ஏக்களை தனி அணியாக பிரித்தது. அதாவது 20 எம்.பி.,க்களை என்சிபிஐ என்ற அறியப்படாத கட்சியில் இணை த்து, நாடாளுமன்றத்தில் மசோ தாக்களை நிறைவேற்ற தங்கள் ஆதரவு வாக்குகளாக மாற்றிக் கொண்டது பாஜக. அதே போல 60க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை கொண்ட அணியே உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என்று ரிதபிரதா பானர்ஜி (திரிணாமுல் எம்.பி.,) மூலம் கட்சிக்குள் குழப் பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது போக ஒரு தலைக்கு ரூ.15 முதல் ரூ.50 கோடி வரை அளித்து சிவ சேனா (உத்தவ்) கட்சியின் 6 எம்.பி.க் களையும் தங்கள் கூட்டணி பக்கம் வளைத்துள்ளது பாஜக. இந்நிகழ்வு களால் நாடாளுமன்றத்தின் எம்.பி. க்கள் எண்ணிக்கையின் சமனை மாற்றி அமைத்துள்ளது.

மீண்டும்...

இந்நிலையில், பணபலம் ; குதிரை பேரம் ; மிரட்டல் மூலம் எதிர்க்கட்சிகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியதன் மூலம், கடந்த ஏப்ரலில் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தோல்வியடைந்த மக ளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி வரையறை மசோதாக் களை மீண்டும் கொண்டு வர பாஜக திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி வரையறை மசோ தாக்கள் மக்களவையில் 54 வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்விய டைந்தது. இதனால் தான் மக்கள வையில் மசோதாவிற்கு சாதகமாக வாக்குகளை பெற எதிர்க்கட்சி களின் ‘இந்தியா’ கூட்டணியில் அங் கம் வகிக்கும் திரிணாமுல் காங்கி ரஸ், சிவசேனா (உத்தவ்) கட்சியின் எம்.பி.,க்களை பாஜக தங்களுக்கு சாதகமாக வளைத்துள்ளது. இதன் மூலம் மகளைவையில் தேசிய ஜன நாயக கூட்டணிக்கு கூடுதலாக 26 வாக்குகள் (தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு தற்போது மொத்த வாக்கு கள் 318) கிடைக்கும்.

சமாஜ்வாதியை உடைக்க பாஜக தீவிரம்?

ஆனாலும் மசோதா நிறை வேற்ற தேசிய ஜனநாயக கூட்ட ணிக்கு இன்னும் 28 எம்.பி.,க்கள் குறைகிறது. இதனால் சமாஜ்வாதி கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி, எம்.பி.,க்களை விலைக்கு வாங்க பாஜக தீவிரமாக முயன்று வரு கிறது. சமாஜ்வாதி கட்சிக்கு 37 மக்களவை எம்.பி.,க்கள் உள்ள னர். சமாஜ்வாதி மற்றும் காங்கி ரஸ் எம்.பி.,க்களை வளைக்க பாஜக தனியாக தங்கள் கட்சிக்குள் ஒரு அணியைவே உருவாகியுள்ள தாகவும் செய்திகள் வெளியாகி யுள்ளன.

மாநிலங்களவை...

மக்களவையைப் போலவே, மாநிலங்களவையிலும் இந்த மசோ தாக்களுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதற்கு 164 வாக்குகள் அவசியமா கும். மாநிலங்களவையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது 150 எம்.பி.,க்கள் உள்ளனர். ஆம் ஆத்மி 7 எம்.பி.,க்களை பாஜக தங் கள் பக்கம் வைத்துள்ளது. இது தொடர்பாக மாநிலங்களவை எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., க்களை சிலரை ராஜினாமா செய்ய வைத்துள்ளது பாஜக. இதன்மூலம் ஜனநாயகத்திற்கு அநீதியான 2 மசோதாக்களை நிறைவேற்ற பாஜக தொடர்ச்சியாக அடாவடி யில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.