அப்பாவி இந்துக்களுக்குப் பட்டா வழங்குவதை பாஜக எதிர்ப்பதா?
11 Jul 2026, 9:34 pm
<p><strong>அப்பாவி இந்துக்களுக்குப் பட்டா வழங்குவதை பாஜக எதிர்ப்பதா?</strong></p><p>சாமி. நடராஜன் கடும் கண்டனம்! மயிலாடுதுறை, ஜூலை 11- கரூர் மாவட்டத்தில் பல தலை முறைகளாகக் குடியிருந்து விவ சாயம் செய்து வரும் அப்பாவி இந் துக்களுக்குப் பட்டா வழங்குவதை, பாஜக மற்றும் அதன் தலைவர்கள் அரசியல் ஆதாயத்திற்காக எதிர்ப்ப தாகத் தமிழ்நாடு அடிமனை பய னாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமி. நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார். மயிலாடுதுறையில் சனிக் கிழமை செய்தியாளர்களைச் சந் தித்த அவர் கூறியதாவது: 1963-லேயே வழங்கப்பட்ட ரயத்துவாரி பட்டா! கரூர் மாவட்டத்தில் புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி, கல் யாண பசுபதீஸ்வரர் உள்ளிட்ட 4 முக் கியக் கோவில்களைச் சுற்றியுள்ள 15 கிராமங்களில் உள்ள 3,084 ஏக்கர் நிலங்களை, கடந்த 1963-ஆம் ஆண்டே அன்றைய அரசு ‘இனாம் ஒழிப்புச் சட்டத்தின்’ கீழ் அங்கு சாகு படி செய்த 3,330 விவசாயிகளுக்கு ரயத்துவாரி பட்டாவாக வழங்கியது. பின்னர், இந்த நிலங்களை நில உடைமையாளர்களாக மாறியுள்ள விவசாயிகள் பத்திரப்பதிவு செய்வ தற்கு எவ்விதத் தடையும் இல்லை என இந்து சமய அறநிலையத்துறை யும் கடந்த 9-ஆம் தேதி அதிகா ரப்பூர்வ கடிதம் வழங்கியுள்ளது. தற்போது இந்த இடங்களில் நான்கு தலைமுறைகளாக 10,000-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும் பங்கள் வசித்து வருகின்றன. எந்த வொரு அரசு ஆவணத்திலும் இந்த இடங்கள் கோவிலுக்குச் சொந்தமா னவை என்று பதிவு செய்யப்பட வில்லை. பா.ஜ.க தலைவர்களின் உண்மைக்குப் புறம்பான அவதூறு இப்படியிருக்க, கோவிலுக்குச் சொந்தமான ரூ. 25,000 கோடி மதிப் புள்ள சொத்துக்களை எடுத்து, ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு தனியாருக்குப் பட்டா வழங்கப் போவதாகப் பா.ஜ.க தலைவர்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனி வாசன் ஆகியோர் திட்டமிட்டுப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இங்குப் பயனாளிகளாக இருக்கும் 3,000 பேரும் இந்துக்கள்தான். பா.ஜ.க ஆளும் குஜராத், மகா ராஷ்டிரா மாநிலங்களில் இனாம் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படு வதை ஆதரிக்கும் இந்த நபர்கள், தமிழ்நாட்டில் மட்டும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆட்சி செய்கிறார் என்றும் ‘இந்துக்களின் நிலங்க ளைத் தனியாருக்குத் தருகிறார்’ என வன்மத்துடன் அவதூறு பரப்பு கின்றனர். இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொண்டு, ஏழை இந்துக்களின் வாழ்வாதாரத்திற்கு எதிராகச் செயல்படும் பாஜகவினர் இந்த அவதூறுகளை நிறுத்தத் தவறினால், மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும். இவ்வாறு சாமி. நடராஜன் எச்சரித்துள்ளார். இச்சந்திப்பின் போது சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ். துரை ராஜ், மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.விஜய் உள்ளிட்ட நிர்வாகிகள் உட னிருந்தனர்.</p>
