மீண்டும் சிவசேனாவை உடைக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி ; எம்.பி.,க்களுக்கு ரூ.15 கோடி
18 Jun 2026, 9:05 pm

மீண்டும் சிவசேனாவை உடைக்கும் பாஜக எம்எல்ஏக்களுக்கு ரூ.10 கோடி ; எம்.பி.,க்களுக்கு ரூ.15 கோடி

மகாராஷ்டிராவில் கடந்த 2022ஆம் ஆண்டு சிவசேனா கட்சியை ஏக்நாத் ஷிண்டே மூலம் இரண்டாக உடைத்து மகா விகாஸ் அகாதி (காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ்) கூட்டணி ஆட்சியை பாஜக கவிழ்த்தது. இதன்பிறகு சிவசேனா (உத்தவ்), சிவசேனா (ஷிண்டே) என ஒரே கட்சி 2 பிரிவானது. தொடர்ந்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் அஜித் பவார் மூலம் பாஜக இரண்டாக உடைத்து, மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சியை கொண்டு வந்தது. உடைக்கப்பட்ட கட்சி பிரிவு தான் உண்மையான சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) என தேர்தல் ஆணையம் மூலம் பாஜக அங்கீகாரம் வாங்கி கொடுத்து, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியே மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.

இந்நிலையில், உத்தவ் பிரிவு சிவசே னாவிற்குள் ‘ஆபரேசன் டைகர்’ என்ற பெயரில் பாஜக மீண்டும் குதிரை பேரத்தை துவங்கி யுள்ளது. ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.10 கோடி, எம்.பி.,க்கு ரூ.15 கோடி அளிப்பதாக கூறி, அக்கட்சி எம்எல்ஏ, எம்.பி.,க்களை வளைத்து, தனது கூட்டணியான சிவசேனா (ஷிண்டே) முகாமில் இணைக்க பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. எம்.பி.,களுக்கு ரூ.50 கோடி என்றும் கூறப்படுகிறது.

றும் கூறப்படுகிறது. சிவசேனா (உத்தவ்) கட்சியில் இருந்து 6 எம்.பி.,க்களும் (மொத்தம் 9 - கிளர்ச்சியா ளர்களை சேர்த்து), 16 எம்எல்ஏக்களும் (மொத்தம் 20) ஏக்நாத் ஷிண்டே தலைமை யிலான சிவசேனாவில் இணைய உள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஜூன் 14ஆம் தேதி உத்தவ் தாக்கரே கூட்டிய அவசர ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் மொத்த முள்ள 9 மக்களவை உறுப்பினர்களில் 5 பேர் பங்கேற்காததை அடுத்து இந்த விவகாரம் தீவிரமடைந்தது. ஆனால் அன்றைய தினமே தில்லியில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா எம்.பி., சஞ்சய் தேஷ்முக், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஒன்றிய அமைச்சர் பிரதாப் ஜாதவைச் சந்தித்துப் பேசினார்.

3 பேர் மட்டுமே..

இத்தகைய சூழலில், தில்லியில் நடைபெற உள்ள கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள கட்சியின் மக்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் கொறடா உத்த ரவு பிறப்பிக்கப்பட்டது. இந்தக் கூட்டம் வியாழ னன்று காலை 11 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நாடாளு மன்றக் குழு கூட்டத்தில், மக்களவை எம்.பி.,க் கள் 3 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். கட்சி யின் ஒரே மாநிலங்களவை உறுப்பினரான சஞ்சய் ராவத் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டார். 6 எம்.பி.,க்கள் கலந்துகொள்ள வில்லை.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா (உத்தவ்) மாநிலங்களவை தலைவர் சஞ்சய் ராவத், “வியாழனன்று நடைபெற்ற கூட்டத்தில் அரவிந்த் சாவந்த், ராஜாபாவ் வாஜே, அனில் தேசாய் ஆகிய மூன்று மக்க ளவை உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்காத உறுப்பி னர்கள் கட்சியின் கொறடா உத்தரவை மீறி யுள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவ டிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அவர்களின் உறுப்பினர் பதவியை ரத்து செய்வது குறித்து பரிசீலிப்போம். இன்ன மும் அவர்கள் எங்கள் கட்சியின் உறுப்பி னர்களாகவே உள்ளனர். எங்கள் சின்னத்தில் தான் வெற்றி பெற்றனர். கொறடா உத்தரவை மீறியதால் அவர்கள் சட்ட ரீதியிலான நட வடிக்கையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். பாஜக நாட்டின் அரசியலை, குறிப்பாக மகாராஷ்டிர அரசியலை களங்கப்படுத்தி உள்ளது. அதற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும்” என எச்சரிக்கை விடுத்தார்.

மக்களவை சபாநாயகரிடம்?

சிவசேனா (உத்தவ்) பிரிவின் மக்களவை உறுப்பினர்களான நாகேஷ் ஆஸ்திகர், சஞ்சய் தேஷ்முக், சஞ்சய் ஜாதவ், சஞ்சய் தினா பாட்டீல், ஓம் பிரகாஷ் ராஜேநிம்பல்கர், பாவ்சாகேப் வக் சவ்ரே ஆகியோர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் இணைவதற்கான கோரிக்கை அடங்கிய கடிதத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தக வல்கள் தெரிவிக்கின்றன. எனினும், இதற்கான நடைமுறை இன்னும் முழுமையடையவில்லை. அவர்கள் வரும் நாட்களில் சபாநாயகரை நேரில் சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது அவர்கள் சமர்ப்பித் துள்ள கடிதத்தில் உள்ள கையெழுத்தை சரிபார்க்கும் பணி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.