50 எம்எல்ஏக்கள், 20 எம்.பி.,க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக தீவிரம்
29 May 2026, 8:14 pm

50 எம்எல்ஏக்கள், 20 எம்.பி.,க்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக தீவிரம்

நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் தற்போது முதலமைச்சராக இருக்கும் பாஜகவின் சுவேந்து அதிகாரி நந்திகிராம், பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். பவானிபூர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று, நந்திகிராம் தொகுதியை அவர் ராஜினாமா செய்தார்.

விரைவில் நந்திகிராம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பா ளர்களை தேர்வு செய்ய கடுமையாகத் திணறி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் சுவேந்து அதி காரியிடம் தோல்வியடைந்த பவித்ரா கர், தாம் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று கூறி யுள்ளார். அதேபோல், திரிணாமுல் காங்கிர ஸின் மூத்த தலைவரான ஷேக் சுபியானும், தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி, போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

இதனால் எம்.பி.,க்களில் யாராவது ஒரு வரை நந்திகிராம் இடைத்தேர்தலில் நிறுத்த திரிணாமுல் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முயன்றார். ஆனால் அவர்களில் 12 எம்.பி.,க்களை அபிஷேக் பானர்ஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதன்பிறகு தான் திரிணாமுல் எம்எல்ஏக்கள், எம்.பி.,க்களை விலைக்கு வாங்கும் ‘ஆபரேசன் லோட்டஸ்’ திட்டத்தை பாஜக செயல்படுத்த தீவிர முயற்சி மேற்கொண்டு வருவது அம்பலமாகியுள்ளது.

பாஜக மூத்த தலைவர் சௌமித்ரா கான் ஊடகங்களிடம் இதனை ஒப்புக் கொண்டு ள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறு கையில், “திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்த 50 சட்டமன்ற உறுப்பினர்களும், 20 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாஜகவில் இணையத்தயாராக உள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என அவர் கூறியுள்ளார். திரிணா முல் காங்கிரஸ் கட்சியை உடைக்க பாஜக தீவிரமாக இறங்கியுள்ள சூழலில், மம்தா பானர்ஜி மூத்த தலைவர்களிடம் ஆலோச னையை தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாஜகவிற்கு பலத்த போட்டியளிக்க இடதுமுன்னணி ஆலோசனை

நந்திகிராம் சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க திரிணாமுல் திணறி வரும் சூழலில், சமீபத்தில் நடந்த பால்டா சட்டமன்ற இடைத்தேர்தலில் சிறப்பான செயல்பாட்டின் மூலம் இரண்டாம் இடத்தைப் பிடித்த இடது முன்னணி நந்திகிராமிலும் பலத்த போட்டியை வெளிப்படுத்தத் தயாராகி வருகிறது. இடைத்தேர்தலில் சிபிஎம் சார்பில் வேட்பாளரை களமிறக்க இடது முன்னணி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.