பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி இல்லை ஹரியானா முதலமைச்சர் பேச்சால் பாஜகவிற்குள் சலசலப்பு
11 Aug 2026, 8:50 pm

பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி இல்லை ஹரியானா முதலமைச்சர் பேச்சால் பாஜகவிற்குள்

சலசலப்பு

பஞ்சாப் மாநிலத்தில் 2027ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்ததேர்தலில் ஆம் ஆத்மியை உடைத்த எம்.பி.க்கள் அணி, காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் அணி மற்றும் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. கடந்த வார இறுதியில் பிரதமர் மோடியைச் சந்தித்து சிரோமணிஅகாலி தளத் தலைவர் சுக்பீர் சிங் பாதல் பாஜக உடனான கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

இந்நிலையில், ஹரியானா முதலமைச்சர் நயாய் சிங் சைனி,“பஞ்சாப்பில் சிரோமணி அகாலி தளத்துடன் கூட்டணி இல்லை” என வெளிப்படையாக அறிவித்து, பாஜகவிற்குள்சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சண்டிகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கூறுகையில்,“பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளத்துடன் எந்தவொரு கூட்டணிக்கும் வாய்ப்பில்லை. பாஜகவின் கூட்டணி பஞ்சாப் மக்களுடன் மட்டுமே. மாநிலத்தில்அடுத்த ஆட்சியை பாஜகதான் அமைக்கும். பிரதமர் மோடி இந்தியாவின் 140 கோடி மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார், அவர் யாரை வேண்டுமானாலும் சந்திக்கலாம். சுக்பீர் சிங் பாதலை மோடிசந்தித்ததால், கூட்டணி என்று அர்த்தம் கிடையாது” என்று அவர்கூறினார்.

அகாலி தளம் அவசர ஆலோசனை

சிரோமணி அகாலி தளம் பாஜகவின் நெருங்கிய கூட்டாளி ஆகும். னால் 2020-2021ஆம் ஆண்டில் நடைபெற்ற விவசாயப் போராட்டத்தின் போது,“பாஜக உடன் இனியும் இருந்தால் தங்கள் நிலைமை மோசமாகிவிடும்”என்பதை உணர்ந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.

2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட சிரோமணி அகாலிதளம் பாஜக உடன் கூட்டணி வைக்காமல் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் 2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக உடன்திடீரென சிரோமணி அகாலி தளம் நெருக்கம் காட்டியது. இந்த நெருக்கம் கூட்டணிக்கானது என செய்திகள் வெளியானது. ஆனால் ஹரியானா பாஜக முதலமைச்சர் பேச்சால் அகாலி தளம் அவசரஆலோசனையில் இறங்கியுள்ளது.