முந்தய பக்கம்

கையை நீட்டி கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி., மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை

11 Dec 2025, 3:52 pm
கையை நீட்டி கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி., மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை
<p><strong>கையை நீட்டி கேள்வி எழுப்பிய பாஜக எம்.பி., மக்களவை சபாநாயகர் எச்சரிக்கை</strong></p> <p>நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் வியாழனன்று காலை &nbsp;மக்களவையில் மேற்கு வங் கத்தைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரஸ் &nbsp;எம்.பி., ஒருவர் அவையில் இ-சிகரெட்டுக ளை புகைத்ததாக பாஜக எம்.பி., அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டினார். மேலும் மக்க ளவை &nbsp;சபாநாயகர் ஓம் பிர்லாவிடம், &ldquo;இ-சிகரெட்டுகள் அவையில் அனுமதிக்கப் படுமா? அவையில் யாராவது இ-சிகரெட் புகைக்க அனுமதிக்கிறீர்களா?&rdquo; என்று கையை நீட்டியவாறு கேள்வி எழுப்பினார். உடனே சபாநாயகர் ஓம் பிர்லா, பாஜக எம்.பி., அனுராக் தாக்கூரை நோக்கி,&ldquo;நீங்கள் என்னிடம் கேள்வி கேட்க முடியாது? எப்படி கேள்வி கேட்கலாம்?&rdquo; என காட்டமாக பேசி எச்சரிக்கை விடுத்தார். அனுராக் தாக்கூர் அமைதியானார். அதன்பின் சபாநாயகர் ஓம் பிர்லா,&ldquo;அவையில் யாரும் இ-சிகரெட் புகைக்க அனுமதிக்கப்படவில்லை. &nbsp;அதற்கு அனுமதியும் இல்லை&rdquo; என கூறினார். சபாநாயகரின் காட்டமான பேச்சால் மக்க ளவை சிறிது நேரம் அமைதியானது.</p>
Share
FacebookXWhatsAppTelegram