பாஜக எம்.பி-யின் 'லுங்கிவாலா' கருத்து - நடவடிக்கை எடுக்க கோரி நோட்டீஸ்
12 Aug 2026, 6:12 pm

தென்னிந்தியர்களை அவமதிக்கும் வகையில் பாஜக எம்.பி. சுஷ்மிதா தேவ் கூறிய 'லுங்கிவாலா' என்ற கருத்துக்கு நடவடிக்கை எடுக்க கோரி சிபிஎம் எம்.பி ஜான் பிரிட்டாஸ் நோட்டீஸ் அளித்துள்ளார்.

யு.பி.ஐ பரிவர்த்தனைகள் மீதான கூடுதல் கட்டணம் விதிப்பதற்கான திருத்த மசோதா குறித்து மாநிலங்களவையில் ஜான் பிரிட்டாஸ் எம்.பி பேசிக்கொண்டிருந்தபோது, அவரை பாஜக எம்.பி. சுஷ்மிதா தேவ் 'லுங்கிவாலா' என்று குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து, சுஷ்மிதா தேவுக்கு இடதுசாரி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தின் கண்ணியத்திற்கும், உறுப்பினர்களின் உரிமைகளுக்கும் எதிரான வகையில் நடந்துகொண்ட சுஷ்மிதா தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இடதுசாரி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சூழலில், இது தென்னிந்தியர்களை அவமதிக்கும் செயல் என்று குறிப்பிட்டு, சுஷ்மிதா தேவ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஜான் பிரிட்டாஸ் எம்.பி உரிமை மீறல் தொடர்பான நோட்டீஸை அளித்துள்ளார்.

கடந்த காலங்களிலும் தென்னிந்தியர்களை அவமதிக்க 'லுங்கிவாலா' மற்றும் 'மெட்ராஸி' போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டதை பிரிட்டாஸ் சுட்டிக்காட்டினார். இப்பிரச்சினை குறித்து விவாதிக்க சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தனது அறைக்கு அழைப்பதாகத் தெரிவித்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்தார்.