‘நாட்டில் சுத்தமான பெட்ரோல் இல்லை’ பாஜக எம்.பி பேச்சு
10 Aug 2026, 9:10 pm

‘நாட்டில் சுத்தமான பெட்ரோல் இல்லை’ பாஜக எம்.பி பேச்சு

போபால் நாட்டில் சுத்தமான பெட்ரோல் இல்லை எனவும், சுத்தமான பெட்ரோல் என்ன யாராவது ஒருவரின் அப்பன் வீட்டிலிருந்தா வரும் எனவும் மத்தியப் பிரதேச மாநில ரேவா தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனார்த்தன் மிஸ்ரா மிக மலிவாக பேசியுள்ளார்.

அவரது பேச்சு நாடு முழுவதும் எழுந்துள்ள எத்தனால் பிரச்சனை தொடர்பான விவாதங்களை தீவிரப்படுத்தியுள்ளது. எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக பல வாகனங்கள் கடும் சேதங்களை சந்தித்து வருகின்றது. இதற்கான இழப்பீடுகள் ஏதும் இல்லாமல் வாகன உரிமையாளர்களே கடும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் எத்தனால் கொள்கைக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றது. எதிர்க்கட்சிகள் துவங்கி பொது மக்கள் வரை எத்தனால் கலந்த

பெட்ரோல் பயன்பாடு தொடர்பாக மோடி அரசின் மீது கடும் விமர்ச

னங்களை வைத்து வருகின்றனர்.

பொய் தகவல்

ஒரு நிகழ்வில் பேசிய அவர் எத்தனால் வாகன இன்ஜின்களைப் பாதிப்பதில்லை என்பதை ஆட்டோமொபைல் நிபுணர்களும் மெக்கானிக்குகளும் ஒப்புக்கொள்கிறார்கள். பிரேசில் உலகின் மிகப்பெரிய எத்தனால் உற்பத்தியாளர் எனவும் அந்நாடு 100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்துவதாக பொய்த் தகவல்களையும் பரப்பினார்.